முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

 

 


*தூத்துக்குடி ட்ரையல்ப்ளேஸர்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட பாரா விளையாட்டு சங்கம் சார்பில் மகளிர் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது.*


சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 11-03 - 2023 வெள்ளியன்று தூத்துக்குடி ட்ரையல்ப்ளேஸர்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட பாரா விளையாட்டு சங்கம் இணைந்து மகளிர் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்  போட்டிகள் தூத்துக்குடி தருவை மைதானத்தில்  நடைபெற்றது 

 


நடந்த இந்த போட்டிகளை தூத்துக்குடி மாவட்ட  மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஆண்டனி அதிர்ஷ்டராஜ், தூத்துக்குடி ட்ரையல்ப்ளேஸர்ஸ் ரோட்டரி சங்க தலைவர் மலர்விழி , தூத்துக்குடி மாவட்ட பாரா விளையாட்டு சங்க தலைவர் முஹம்மது நசீர், ரோட்டரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறப்பு பள்ளிகளைச் சேர்ந்த மகளிர் மாற்றுத்திறனாளிகள் இந்த போட்டிகளில் கலந்துகொண்டனர். இவர்களுக்கு ஓட்டப்பந்தயம், குண்டுஎறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழை டி.எஸ்.எப் குழுமங்களின் நிர்வாக பங்குதாரர் சந்திரா மனோகரன் வழங்கினார்.இந்த போட்டிகளில் கலந்து கொண்ட அணைவருக்கும்  கலந்து கொண்டதற்கான பரிசுகள் வழங்கப்பட்டது.




இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி ட்ரையல்ப்ளேஸர்ஸ் ரோட்டரி சங்கத்தை சார்ந்த டாக்டர் பிளோரா, செயலாளர் ப்ரதிமா, பொருளாளர் பிரேமா, திவ்யா, டாக்டர் ரஜினி, ஸ்னோபி தூத்துக்குடி மாவட்ட பாரா விளையாட்டு சங்க செயலாளர் ஸ்டீபன் ஆகியோர் செய்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...