முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தடகளப் போட்டியில் வெங்கலபதக்கம் வெற்ற மாணவி; மாவட்ட ஆட்சியர் வாழ்த்து


 

          நாள்:30.03.2023                                     

தூத்துக்குடி மாவட்டம் தேசிய அளவில் நடைபெற்ற காதுகேளாதோர் மற்றும் வாய்பேசமுடியாதோருக்கான தடகளப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மாணவி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் இ.ஆ.ப., அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேசிய அளவில் நடைபெற்ற காதுகேளாதோர் மற்றும் வாய்பேசமுடியாதோருக்கான தடகளப் போட்டியில் மூன்றாம் பரிசு வென்ற செல்வி.ஆர்.பிரித்தி பிச்சம்மாள் என்பவர், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்களை இன்று (30.03.2023) சந்தித்து, வெண்கலப் பதக்கம் மற்றும் சான்றிதழைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

தூத்துக்குடி மாவட்டம் மில்லர்புரத்தைச் சேர்ந்த திரு.ராகவானந்தம் (தந்தை), திருமதி.ரா.மாலதி (தாய்)  ஆகியோரது மகள் செல்வி ஆர்.பிரித்தி பிச்சம்மாள் என்பவர் தூத்துக்குடி வ.உ.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை வணிகவியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற 25ஆவது தேசிய அளவிலான காதுகேளாதோர் மற்றும் வாய்பேசமுடியாதோருக்கான தடகளப் போட்டிகளில் குண்டு எறிதல் போட்டியில் கலந்துகொண்டு மூன்றாம் பரிசு வென்றுள்ளார். இந்நிலையில், தான் வென்ற வெண்கலப் பதக்கம் மற்றும் சான்றிதழை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்களிடம் இன்றையதினம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், இதுபோன்று இன்னும் பல பதக்கங்களைப் பெற்று வெற்றிபெற வேண்டும் என மாணவியை வாழ்த்தினார்கள். 

இந்நிகழ்வின்போது, தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு.கௌரவ் குமார் இ.ஆ.ப., அவர்கள், துணை ஆட்சியர் (பயிற்சி) திரு.பிரபு அவர்கள், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.எஸ்.அந்தோணி அதிர்ஷ்டராஜ், தூத்துக்குடி மாவட்ட தடகள கழகச் செயலாளர் திரு.பழனிச்சாமி, தூத்துக்குடி மாவட்ட தடகள கழகப் பொருளாளர்-பயிற்சியாளர் திரு.அருள்சகாயம், மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் திரு.மெய்கண்டன், அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். 

.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்