தொடுவானம் இலக்கிய இதழின் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் புலவர்.சு.முத்துசாமி அவர்கள் எழுதிய கவிதை நூல் வெளியீட்டு விழா

 


தொடுவானம் இலக்கிய இதழின் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் புலவர்.சு.முத்துசாமி அவர்கள் எழுதிய "கவிதைப் பூஞ்சோலை"கவிதை நூல் வெளியீட்டு விழா  (10.09.23) ஞாயிற்று கிழமை காலை 11 மணி அளவில் தூத்துக்குடி  அழகப்பா கல்வி மைய அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் முதலாவதாக    D.தனசேகர் வந்திருந்த அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்   தொடுவானம் இலக்கிய இதழின் ஆசிரியர் நெல்லை தேவன், தொடுவானம் கடந்து வந்த பாதை மற்றும் ஒவ்வொரு ஆண்டும் நடத்திய போட்டிகள் குறித்துப் பேசினார்.தொடர்ந்து இந்த ஆண்டு நடத்திய புதுக்கவிதைப்போட்டி குறித்தும் பேசினார்.

    கவிதை போட்டியில் வெற்றிபெற்ற கவிதைகளை ஆசிரியர் தேவன் மற்றும் துணையாசிரியர் ஆ.மாரிமுத்து இருவரும் வாசித்தார்கள்.

     கவிஞர் மூக்குப்பேரி தேவதாசன்  தொடுவானம் இதழ் குறித்துப் பேசினார்

நிகழ்ச்சியின் இரண்டாவது பகுதியாக ... வீதிநாடகக் கலைஞர்.ப.சக்திவேல் நூலாசிரியரைப்பற்றி அறிமுக உரையாற்றினார்.

தூத்துக்குடி சரவணா ஹோட்டல் உரிமையாளர் திரு.செந்தில் ஆறுமுகம் நூலை வெளியிட சுபா கிராபிக்ஸ் உரிமையாளர் திரு.பா.சுப்புராஜ் நூலைப்பெற்றுக்கொண்டார்

 கவிஞர்.ஆ.மாரிமுத்து,திரு.து.பத்மநாதன் இருவரும் நூலைத் திறனாய்வு செய்து பேசினார்கள்.

நூலாசிரியர் புலவர்.சு.முத்துசாமி ஏற்புரை வழங்கினார்.

தொ.க.இ.பேரவையின் சார்பில் நூலாசிரியருக்குச் சான்றிதழும் புத்தகம் அடங்கிய நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் நிறைவாக குறும்பட இயக்குனர் திரு.சோ.அருந்ததி அரசு நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்