சமீபத்தில் தொடுவானம் கலை இலக்கிய பேரவை சார்பில் நூல் வெளியீட்டு நிகழச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு... நிகழ்ச்சியை பற்றி எழுத்தாளர். முத்தாலங்குறிச்சி காமராசு பெருமிதத் தோடு கூறியது ....
தூத்துக்குடியில் இயங்கி வரும் தொடுவானம் கலை இலக்கிய பேரவை மிக முக்கிய அமைப்பாகும்.
இதன் நிறுவனர் மற்றும் தலைவர் நெல்லை தேவன் ஆவார். எனக்கு கிட்டத்தட்ட ஐந்து வருடமாக பழக்கம். சிறந்த எழுத்தாளர். நான் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற போது எனக்கு கோவில்பட்டியில் வைத்து பாராட்டு விழா நடத்தும் போது அவருக்கும் பாராட்டு சான்றிதழ் கொடுத்தார்கள். அப்போது தான் முதல் முதலில் சந்தித்தேன். அதன் பிறகு அவர் என்னிடம் அடிக்கடி பேசிக்கொள்வார். அவர் மாதந்தோறும் நடந்தும் தொடுவானம் நிகழ்ச்சியில் ஒரு நாள் என்னை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார். அதன் பின் புத்தக கண்காட்சியில் இணைந்தோம்.
தொடர்ந்து தூத்துக்குடி சிறுகதை எழுத்தாளர்களை ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சியிலும் ஒருங்கிணைந்தோம். இப்படியாக எங்கள் உறவு தொடர்ந்தது. தொடர்ந்து எனது எழுத்துலகில் வளரும் எழுத்தாளராக வலம் வரும் மகள் சாந்திபிரபு அவர்களின் நூல் வெளியிட்டு விழாவிற்கும் தொடுவானம் என்னை அழைத்து கொளரவித்தது. அதன் பின் -ஏரலில் தாமிரபரணி மன்றம் சார்பில் நடந்த விருது வழங்கும் விழாவில் அவருக்கும் எனக்கு ஒரே மேடையில் விருது கொடுத்தார்கள் இசைக்கும் மணி அய்யா.
ஒரு நாள் என்னிடம் அவர் தொடர்பு கொண்டு இந்த வருடம் முதல் தொடுவானம் இரண்டு விருதுகளை கொடுக்கலாம் என முடிவு செய்துள்ளது. ஒன்று இலக்கியச் சுடர் விருது, மற்றொருன்று கலைச்சுடர் விருது. இரண்டுமே தூத்துக்குடி மாவட்டத்தினை சேர்ந்தவராக இருந்தால் நன்றாக இருக்கும் என்றார். நான் கலைக்கு சகா சங்கரை பரிந்துரைத்தேன். இலக்கியத்துக்கு யாரை தேர்ந்தெடுக்கலாம் என்று கேட்ட போது, உங்களுக்குத்தான் அந்த விருது என்று கூறிவிட்டார். அழைப்பிதழ் வரும் போது கூடுதல் மகிழ்ச்சி. நான் முதல்முதுலாக வார, தினசரி இதழை தாண்டி நூலாக படித்த முதல் புத்தகம் காட்டுக் குயில்கள். இந்த புத்தகத்தின் ஆசிரியரும் பிற்காலத்தில் எனக்கு பொருநை செல்வர் என பட்டம் கொடுத்தவருமான குறிஞ்சி செல்வர் கோ.ம.கோதண்டம் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குவதாக குறிப்பும் இருந்தது.
எனக்கு மிகவும் சந்தோசம். பெரும்பாலுமே தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்று அரசு விருதுகள் பெற்று இருந்தாலும், தனிப்பட்ட முறையில் தனியாக அழைத்து சிறப்பு செய்து விருது வழங்குவது இதுவே முதல் முறை, அதுவும் நான் படித்த முதல் புத்தகத்தின் ஆசிரியருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது, நான் முதல் முதலில் தோரணமலை முருகன் குறித்து பாடல் எழுதி அரங்கேற்றிய போது நடனம் அமைத்து கொடுத்த சகா சங்கருக்கு விருது, நான் இயக்கிய ஆவணப்படமாக கௌசானல் அடிகாளர் படத்துக்கு முதல் பிரேம், முதல் பேட்டி கொடுத்த அருட்தந்தை செல்வராசு அய்யா தலைமை என பெருமையாக இருந்தது.
என்னை பற்றி சாந்தி பிரபு அறிமுகம் செய்தது கூடுதல் சந்தோசம். அதே போல் இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் நெல்லை தேவனின் “வலிகளின் ஊர்வலம்” என்ற நூல் வெளியிட்டு விழாவும் நடந்தது. நுலை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநில பொதுச்செயலாளர் மருததுவர் த. அறம் அய்யா வெளியிட, எனக்கு முதல் பிரதி பெற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இது கூடுதல் மகிழ்ச்சி. அறம் அய்யா அவர்களை தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருக்கிறேன். இந்த மேடையில் ஒன்றாக அமர்ந்து இருக்கும் வாய்ப்பு கிடைத்தது மிக்க சந்தோசம்.
நெல்லை தேவன் வெளியிட்டு விழாவும் மிகச்சிறப்பாக இருந்தது. மிகப்பிரமாண்டான நூல் அட்டையை வடிமைத்து அதை வைத்து நூலை வெளியிட்டோம். கடைசியில் அருமையான விருந்து கொடுத்து இருந்தார்கள். வந்தவர்களை கௌரவிப்பது, வரவேற்பது என ஒவ்வொரு பணியையையும் மெனக்கெட்டு உருவாக்கி இருப்பது என அனைத்து பணிகளும் சிறப்பாக இருந்தது
.
இந்தநிகழ்ச்சிக்கு நெல்லை தேவன். குடும்பமே கலந்துகொண்டது, அவரது மகள் மேடையில் பேசினார். எழுத்தாளரின் வாரிசு மேடையில் ஏறுவது மிகச்சிறப்பான ஒன்றாகும். அதுவும் நெல்லை தேவனின் நூல் வெளியிட்டு விழாவில் அவரது மகளும் மகனும் மேடையேறி இருப்பது அனைவரின் மனதில் சந்தோசத்தினை வரவழைத்தது.
நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கிய புலவர் முத்துசாமி அய்யா அவர்களுக்கும், வாழ்த்துரை வழங்கிய ஆசிரியர் ஆல்பர்ட் அய்யா, நெடுஞ்சாலை கவிஞர் செல்வராஜ் அய்யா, தேரி எழுத்தாளர் கண்ணகுமார விஸ்வ்ரூபன் அய்யா அவர்களுக்கும், வங்கி மேலாளர் மாணிக்கவாசகம் அய்யா அவர்களுக்கும், இலக்கிய ஆர்வலர் லாரன்ஸ் அவர்களுக்கும், தமிழ் இலக்கியப்பேரவை செயலர் ஆதி அருமை நாயகம் அவர்களுக்கும், கலை வளர்மணி சக்திவேல் அய்யா அவர்களுக்கும், குறும்பட இயக்குனர் அருந்ததி அரசு, கவிஞர் செந்தில் குமார் , எழுத்தாளர் சாந்தி உள்பட அனைவருக்கும் நன்றி. நன்றி கூறிய கரூவூலத்துறை அதிகாரி செய்யது முகமது ஷெரிப் அய்யா அவர்களுக்கும் நன்றி. ஏற்புரையை மிக குறைவாக பேசி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழத்திய நெல்லை தேவனக்கும் நன்றி.
கலை பண்பாட்டுத்துறை மூலம் விருது பெற்றவர்கள் மூன்றுபேர் இருந்தோம். அதில் நானும் சகா சங்கரும் விருது வாங்கினோம். மற்றொருவர் சக்தி வேல் அவர்கள். அவர் எனக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தது கூடுதல் மகிழ்ச்சி. நன்றி கலை வளர்மணி சக்திவேல் என்னை அழைத்து வர மோட்டார் சைக்கிளில் வந்த நெடுஞ்சாலை கவிஞருக்கும், என்னை பஸ் நிலையம் அழைத்து சென்று வழியனுப்பி வைத்த வங்கி மேலாளர் பிரபு அவர்களுக்கும் நன்றி
-அன்புடன் : முத்தாலங்குறிச்சி காமராசு
கருத்துகள்
கருத்துரையிடுக