வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின் தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது
இந்த வியாபாரத்தில் சமூக அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது
இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான் தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர்
இது கடந்த 63 ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. இந்த கடையின் பெயர் பலகையின், பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம் அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி யதாக அமைத்து பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,
அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் தான் இது " இளைஞனே! நீ சிகரட்டை பிடிப்பது நிறுத்திவிடு , இல்லையென்றால் ... அது உன்னை விடவே விடாது " என்பதுதான்
இரண்டு தலைமுறையாக இந்த சிறு வியாபாரத்தில் மூலம் ஒரு பெரிய சமூக விழிப்புணர்வை இளைஞர் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது இந்த J.J.சிங் பென் சென்டர்
பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ,பொதுமக்கள், என பலதரபட்டபேர்கள் , கல்வி உபகரணங்களான சிலேட்டு, அதில் எழுத உதவும் குச்சி, பேனா ,பென்சில், ரப்பர், பேப்பர், பரிச்சை அட்டை மற்றும் ஜாமென்ட்ரி பாக்ஸ் என இது போன்ற கல்வி உபகரணங்களை வாங்க வருவோர்களை சிந்திக்க வைக்கும்
பெற்றோர்களிடமும், மாணவர்களிடமும், புகை பிடிப்பது கேடு விளைவிக்கும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் தங்களது இந்த வியாபாரத்தில் இந்த வாசகத்தை முன் நிறுத்தியுள்ளனர்
இன்றைய திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம் பெறும் போது மட்டும் "புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது " என்று ஒரு சிறிய அளவிலான அறிவிப்பு காட்டப்படுகிறது இது இன்றைய சட்டத்தினால் ஏற்பட்ட நடை முறை செயல் என்றாலும்... பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த சிறிய வியாபாரத்தின் மூலம் ஒரு பெரிய சமூக விழிப்புணர்வை ...இளைஞர் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது என்பது பாராட்டுக்குறியது.
இந்த பேனா கடையை இப்போது நடத்தி வரும் திரு.டேவிட் அவர்கள் தனது தந்தை அமரர் திரு. கோவில் பிள்ளை பற்றியும் , கடையை பற்றியும் பகிர்ந்து கொண்டார்.
கோவில் பிள்ளை அவர்கள் 63 ஆண்டுகளுக்கு முன்பே தூத்துக்குடியில் இந்த பேனா கடையை தொடங்கி பல்வேறு கம்பெனி பேனாக்களும், நோட்டு, புத்தகங்களும் இது போன்ற ஸ்டேசனரி பொருள்கள் விற்பனை செய்து வந்தார். இந்த காலகட்டத்தில் , தான் பயன் படுத்தி வந்த சைக்க்கிளில் கூட ... " இளஞனே சிகரெட் பிடிப்பதை விட்டு விடு இல்லையேல் அது உன்னை விடவே விடாது" என்ற விழிப்புணர்வு வாசகத்தோடு தூத்துக்குடி பகுதி முழுவதுவும் வலம் வந்துள்ளார். திரு. கோவில் பிள்ளை அவர்களை தொடர்ந்து அவரது மகன் திரு. டேவிட் அவர்கள் தனது வியாபாரத்தோடு ... இளஞர்களுக்கான விழிப்புணர்வு ஏறபடும் வகையில் நற்சிந்தனையோடு செயல்படுகிறார் என்பது பாராட்டுக்குரியது
கருத்துகள்
கருத்துரையிடுக