முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கவிஞர் மாரிமுத்துவுக்கு பாராட்டு

                                       புதுவை தமிழ் சங்கம் சார்பில் அதன் 9ம் ஆண்டு விழா கடந்த 05-1-2019 அன்று  நடைபெற்ற அதன் 9ம் ஆண்டு விழாவில் நடத்தப்பட்ட கவிதைப்போட்டியில் தூத்துக்குடியை சார்ந்த கவிஞர் மாரிமுத்து இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்களை புதுவை கலை, மற்றும் பண்பாடுதுறை இயக்குனர் திரு.அ.கணேசன் அவர்கள் பராட்டி பரிசு, கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.                        
       பரிசு பெற்ற கவிஞர் மாரிமுத்து  அவர்களை "நமது எழுத்தாணி " அன்போடு வாழ்த்துகிறது.
                       
          கவிஞர் மாரிமுத்துலின் கவிதை                              
                   "எழுதுகோல் வேலை"

எழுதுகோல்
ஏழுலகையும் புரட்டிப் போடும்
நெம்புகோல்

அடிமுதல் முடிவரை
ஆய்ந்து  முடிவு சொல்லும்

புத்தம் புது எழுத்தாணி
பூலோக சக்கரத்தின்  அச்சாணி

இலக்கிய சிற்பியின்
சிறு கை உளி

புதையுண்ட வரலாறுகளை
புதுப்பிக்கும்
புரிய  வைக்கும்

எரியுண்ட ஏகாதிபத்தியத்தை
எளிதாக
எடுத்துரைக்கும்

தேசத்தின்  தீமைகளை
தீயென பொசுக்கும்
தீப்பந்தம்

உறங்கும் எரிமலை
குழம்புகளை
உசுப்பேற்றும் உக்கிரக் காற்று

பட்டம்  படைக்கும்
சட்டம்  திருத்தும்
ஆண்டவனிடம் வேண்டும்
ஆள்பவரை தூண்டும்

ஊமையரை பேசவைக்கும்
பூவையரை புயலாக்கும்

புரட்சி  விதைக்கும்
புதுமை  விவசாயி   !


கவிஞர் , ஆ.  மாரிமுத்து. தூத்துக்குடி .          

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...