முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோவில்பட்டி ஹாக்கி போட்டியில் சாம்பியன் ஷிப்

அகில இந்திய ஹாக்கி: பெங்களூர் ஹாக்கி அசோஸியேஷன் அணி சாம்பியன் 
  கோவில்பட்டி, மே 27:
  தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கிப் போட்டியில் பெங்களூர் ஹாக்கி அசோஸியேஷன் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 
கோவில்பட்டி கே.ஆர். மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் கே.ஆர். கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாதெமியுடன் இணைந்து கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் இம்மாதம் 16ஆம் தேதி முதல் அகில இந்திய ஹாக்கிப் போட்டி நடைபெற்று வந்தது. 
      இப்போட்டியில் 16  அணிகள் பங்கேற்றன. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில், பெங்களூர் ஹாக்கி அசோஸியேஷன் அணி, செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியுடன் மோதியது. முதல் பாதி ஆட்டத்தில், 14ஆவது நிமிடத்தில் பெங்களூர் ஹாக்கி அசோஸியேஷன் அணி வீரர் முகமது ரஹீல் மௌசின் ஒரு கோல் அடித்தார். 18ஆவது நிமிடத்தில் அதே அணி வீரர் குஷா ஜெபி கௌடா ஒரு கோல் அடித்தார். 29ஆவது நிமிடத்தில், செகந்திராபாத் அணி வீரர் இன்னோசெண்ட் குல்லு பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் அடித்தார். 33ஆவது நிமிடத்தில் பெங்களூர் அணி வீரர் குஷா ஜெபி கௌடா பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் அடித்தார். 
      தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது பாதி ஆட்டத்தில், 54ஆவது நிமிடத்தில் செகந்திராபாத் அணி வீரர் ரஞ்சன் ஐயப்பா ஒரு கோல் அடித்தார். 58  மற்றும் 60ஆவது நிமிடத்தில் பெங்களூர் அணி வீரர்கள் ஆஞ்சநேயா அம்பிகரா மற்றும் குஷா ஜெபி கௌடா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். 
ஆட்ட நேர முடிவில் 5-க்கு 2  என்ற கோல் கணக்கில் பெங்களூர் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைப் பெற்றது. 
முன்னதாக நடைபெற்ற மூன்றாம் மற்றும் நான்காம் பரிசுக்கான போட்டியில் 5க்கு 2  என்ற கோல் கணக்கில், சென்னை ஐ.சி.எப். அணி மும்பை அகில இந்திய கஸ்டம்ஸ் மற்றும் சரக்கு சேவை வரி அணியை வீழ்த்தியது. 
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சுழற்கோப்பைகளை வழங்கினார். முதல் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் லட்சுமி அம்மாள் நினைவு சுழற்கோப்பையை பெங்களூர் ஹாக்கி அசோஸியேஷன் அணியும், 2ஆவது பரிசு ரூ.75 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையை செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியும், 3ஆம் பரிசு ரூ.50 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையை சென்னை ஐ.சி.எப். அணியும், 4ஆம் பரிசான ரூ.30 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையை மும்பை அகில இந்திய கஸ்டம்ஸ் மற்றும் சரக்கு சேவை வரி அணியும் பெற்றன. 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்