" தண்ணீர் குறைபாடு இருக்காது " தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்


தூத்துக்குடி மே 27:
   நீர்தேக்க அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருப்பதால் வரும் 30ம் தேதி வரை தூத்துக்குடி மாவட்டத்திற்கு எவ்வித குடிநீர் பாதிப்பும் இருக்காது என தூத்துக்குடி ஆட்சியர் சந்திப்நந்தூரி தெரிவித்தார்.
   தூத்துக்குடி மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆட்சியர் சந்திப்நந்தூரி பொது மக்களிடம் மனுக்களை பெற்றார். முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, விரைவில் மழை பெய்யும் என்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் எவ்வித குடிநீர் பாதிப்பும் இருக்காது.
   போர்வெல் கிணறுகள் மூலம் குடிநீர்சப்ளை செய்யப்படும் கிராமங்களில் போர்வெல் வறண்டுவிட்டால் அவர்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் துவங்கப்பட உள்ளது. மின்வெட்டு அறவே கிடையாது. பராமரிப்பு பணிகளால் மட்டுமே மின்தடை செய்யப்படுகிறது என கூறினார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்