முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொற்றா நோய் தொடர்பான விழிப்புணர்வு

தூத்துக்குடி 2020 மார்ச் 6 ; தூத்துக்குடி ரோட்டரி சங்கம் ரோட்டரி இன்டர்நேஷனல் ப்ராஜெக்ட் பாசிடிவ் ஹெல்த் திட்டத்தின் கீழ், தூத்துக்குடியில் சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் மனிதச்சங்கிலி மற்றும் விழிப்புணர்வுக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.
இம்மனிதச்சங்கிலியில் சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை நர்ஸிங் கல்லூரி மாணவிகளும், புனித மரியன்னை கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாநகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரகாஷ்  கொடியசைத்து துவக்கி வைத்தார்.  தொற்றா நோய்களான சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு, ஸ்ட்ரோக் மாரடைப்பு மற்றும் உடல் பருமன் பற்றிய பதாகைகளைக் கையில் வைத்துக் கொண்டு மாணவியர்கள் கைகோர்த்து நின்றார்கள்.  தொற்றா நோய்கள் பற்றிய கோஷங்களையும் மாணவியர் எழுப்பினர்.
மாணவியரோடு ரோட்டரி மாவட்டத்தின் முன்னாள் ஆளுநர் டாக்டர் விஜயகுமார், ரோட்டரி சங்கத் தலைவர் ஜோ பிரகாஷ், செயலாளர் ஆனந்த் கணேஷ், பொருளாளர் டேவிட் ராஜா மற்றம் முன்னாள் தலைவி உஷா கணேசன்;, சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் அருள்ராஜ் (முன்னாள் அகில இந்திய மருத்துவக் கழகத் தலைவர் மற்றும் முன்னாள் காமன் வெல்த் நாடுகளின் மருத்துவ சங்கத் தலைவர்) நீரழிவு நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர். ஆர்த்தி கண்ணன் மற்றும் அருள்ராஜ் மருத்துவமனை நர்சிங் கல்லூரி முதல்வர் ஆகியோர் உடன் இருந்தனர்.
மனிதச் சங்கிலியில் கலந்து கொண்ட மாணவியருக்கு தேங்காய் பன், வெஜிடபில் பப்ஸ் மற்றும் டீ ஆகியவை ரோட்டரி சங்கத்தின் மூலமாக வழங்கப்பட்டது.
 பின்னர் மருத்துவமனையின் ஆடிட்டோரியத்தில் நடந்த விழிப்புணர்வுக் கூட்டத்தில் முன்னாள் ரோட்டரி ஆளுநர் டாக்டர் விஜயகுமார், டாக்டர். அருள்ராஜ், ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் பாலசேகர் ஆகியோர் தொற்றா நோய்கள் குறித்துப் பேசினர்.
ரோட்டரி சங்கத்தின் சார்பில், கோரோனா வைரஸ் மற்றும் அதைத் தடுக்கும் முறைகள் பற்றிய துண்டு பிரசுரங்கள் ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் டாக்டர் விஜயகுமார் அவர்களால் வெளியிடப்பட்டது.  அதன் முதல் பிரதியை டாக்டர் அருள்ராஜ்  பெற்றுக் கொண்டார்.  இந்தப் பிரசுரங்கள் அனைத்தும் தூத்துக்குடி நகரில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.
பேரணி மற்றும் விழிப்புணர்வுக்கான ஏற்பாடுகளை ரோட்டரி சங்கத் தலைவர் ஜோ பிரகாஷ், செயலாளர் ஆனந்த் கணேஷ், பொருளாளர் டேவிட் ராஜா மற்றும் முன்னாள் தலைவி உஷா கணேசன் ஆகியோர் சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனையோட்டு இணைந்து செய்திருந்தனர்.தொற்றா நோய் தொடர்பான விழிப்புணர்வு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...