திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை


தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97). வயது முதிர்வு காரணமாக கடந்த மாதம் வரை வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார்.அவரது உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.                          அன்பழகன்மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட நாள் முதல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று டாக்டர்களிடமும், அன்பழகனின் குடும்பத்தாரிடமும் விசாரித்து அறிந்தார்.
      அன்பழகனின் உடல் நிலை குறித்து விசாரிக்க மு.க.ஸ்டாலின் இன்றும் மருத்துவமனைக்கு நேரில் சென்றார். அவருடன் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்பட பலர் சென்றனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
      பின்னர், முக ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து, கூறுகையில், திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு தீவிர சிகிச்சைதிமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வயது முதிர்வின் காரணத்தினால் மருத்துவ சிகிச்சைக்கு அன்பழகனின் உடல் ஒத்துழைக்கவில்லை. ஆனாலும் அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்