முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கட்டணம் வசூலிக்காமல் எப்படி தனியார் பள்ளிகளால் ஊதியம் வழங்க முடியும்?- உயர்நீதிமன்றம் கேள்வி

கட்டணம் வசூலிக்காமல் தனியார் பள்ளிகளால் எப்படி ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 5-வது கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படவில்லை. பள்ளிகள் திறக்கப்படாவிட்டாலும், தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தினமும் பள்ளிகளின் நிர்வாக வேலை தரப்படுகிறது. தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் வீட்டில் இருந்தவாறு ஆன்லைனில் பாடம் நடத்துகின்றனர்.
 
இதனிடையே தனியார் பள்ளிகள் மாணவர்களின் கல்வி கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோர்களை நிர்பந்திக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பு சார்பில் உயர்நீதிமன்றத்தில்வழக்குதொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையில்கட்டணம் வசூலிக்காமல் தனியார் பள்ளிகளால் எப்படி ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தும்படி ஆசிரியர்களை வற்புறுத்தும் போது, அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டாமா எனவும் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து ஜூன் 30-ந்தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றநீதிபதிகள்உத்தரவிட்டனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...