முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொரோனா தடுப்பு பணிகளையும், வீடு, வீடாக சென்று மருத்துவ பரிசோதனைகள் செய்யும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு

}த்துக்குடி மாநகராட்சி உட்பட்ட திரேஸ்புரம் தோமையார் கோவில் தெரு நோய்கட்டுப்பாட்டுபகுதிகளில்மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா தடுப்பு பணிகளையும், வீடு, 
வீடாக சென்று மருத்துவ பரிசோதனைகள் செய்யும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (06.07.2020) நேரில் சென்று பார்வையிட்டு 
ஆய்வு செய்தார். மேலும், நோய்கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள வீட்டில் அனைவருக்கும் தெர்மல் ஸ்கிரினிங் மற்றும் பல்சஸ் பரிசோதனை செய்து, படிவத்தில் தெளிவாக பூர்த்தி செய்ய வேண்டும் எனவும், சளி, காய்ச்சல், இரும்பல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் உள்ள நபர்களின் விபரங்களை உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள்மூலம்மாவட்டநிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் எனவும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். 
பின்னர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தாவது:                
தமிழக அரசின் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 
பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திலும், கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஏற்கனவே மாண்புமிகு செய்தி மற்றம் விளம்பரத்துறை அமைச்சர் அவர்களால் கொரோனா நோய் தடுப்பு சிறப்பு காய்ச்சல் முகாம் 
துவக்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட 
பொதுமக்களுக்குமருத்துவபரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா தொற்று உறுதியான நபர்களை அரசு மருத்துவமனைக்குஅனுப்பிவைக்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், தமிழக அரசின்உத்தரவுப்படிமாவட்டநிர்வாகத்தின் மூலம் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு 
வருகிறது.                                                                                                                                            இன்று தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட திரேஸ்புரம் நோய் கட்டுப்பாட்டுபகுதிகளில்மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகளையும், வீடு, வீடாக சென்று 
தெர்மல் ஸ்கிரினிங் மற்றும் பல்சஸ் பரிசோதனை செய்யும் பணிகளும் நேரில் ஆய்வு செய்யப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளபடி, பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே வீட்டில் இருந்து வெளி வர வேண்டும். 
வீட்டில் இருந்து வெளி வரும்போது கட்டாயமாக முககவசங்கள் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க 
வேண்டும் என தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார், இ.கா.ப., மாநகராட்சி ஆணையர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., தூத்துக்குடி சார் ஆட்சியர் 
திரு.சிம்ரோன் ஜீத் சிங் காலோன், இ.ஆ.ப., மாநகராட்சி நகர் நல அலுவலர் மரு.அருண்குமார் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...