முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீh, அரிசி பைகள், காய் கறி வகைகள் மற்றும் முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு


தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பஜாரில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீh, அரிசி பைகள், காய் கறி வகைகள் மற்றும் முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

நேற்று (01.08.2020) மாலை தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பஜார் பகுதியில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர், அரிசி பைகள், காய்கறி வகைகள் மற்றும்  முகக்கவசம் வழங்கி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்களிடம்,  கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கு அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும், எந்த ஒரு இடத்திலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இந்த மூன்றையும் கடைபிடித்தாலே கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முடியும் என்றும், 

கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்வதற்கு நாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும், அது அதிகரிப்பதற்கு கபசுரக்குடி நீர் குடிப்பது,  சத்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வது,  சத்தான காய் கனிகளை உட்கொள்வது ஆகியவற்றின் மூலம் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும் கூறினார். 

இக்கூட்டத்தில் உடன்குடி ஊர் முக்கியஸ்தர்கள், வியாபாரிகள், பொதுமக்கள், திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பாரத், காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...