முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினருக்கு முககவசம் - கிருமி நாசினி - பைபர் முகத்திரை போன்றவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.

 

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு 12000 முகக்கவசம், 1800 கிருமி நாசினி பாட்டில்கள் மற்றும் பைபர் முகத்திரைகள் ஆகியவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று வழங்கினார்.   

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் உள்ள தூத்துக்குடி மாநகரம், தூத்துக்குடி ஊரகம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம், விளாத்திக்குளம், கோவில்பட்டி, மணியாச்சி ஆகிய 8 உட்கோட்டங்களில் பணிபுரியும் காவல்துறையினர் உட்பட அனைத்து காவல்துறையினருக்கும் 12000 முகக் கவசங்கள், 1800 கிருமி நாசினி பாட்டில்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறையினருக்கு 50 பைபர் முகத்திரைகள் ஆகியவற்றை தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு ஒவ்வொரு உட்கோட்ட வாரியாக அனைத்து உட்கோட்ட காவல்துறையினருக்கும் இன்று (08.08.2020) மாவட்ட காவல்துறை அலுவலக வளாக கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார். 

இதற்கான ஏற்பாடுகளை ஏகம் என்ற அமைப்பு சார்பாக செய்திருந்தனர். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு. செல்வன் மற்றும் திரு. கோபி, தூத்துக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. கணேஷ், முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அன்னராஜ், தூத்துக்குடி போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளர் திரு. மயிலேறும் பெருமாள் மற்றும் உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...