முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காவல்துறை சோதனைச் சாவடியின் புதிய கட்டிடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள்திறந்து வைப்பு

 

21.08.2020

தூத்துக்குடி மாவட்ட எல்லையான கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல்துறை சோதனைச் சாவடியின் புதிய கட்டிடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி சிறப்புரையாற்றினார். 


தூத்துக்குடி மாவட்ட எல்லையான கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல்துறை சோதனைச் சாவடிக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை நேற்று (20.08.2020) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 


பின் அவர் பேசுகையில் தூத்துக்குடி மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள இந்த சோதனைச் சாவடி நீண்ட நாள் கோரிக்கையாகும். அருகில் தென்காசி மாவட்டம் உருவாகியுள்ளது. சோதனைச் சாவடி என்பது மிக, மிக முக்கியமான ஒன்றாகும். முன்பு இந்த சோதனைச் சாவடி சாதாரண கொட்டகையாகத்தான் இருந்தது. இப்போது காவல்துறையினர் வாகன சோதனை பணியை மேற்கொள்வதற்கு ஏற்ப அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு;ள்ளது. இந்த சோதனைச்சாவடி அமைந்திருப்பது உங்களுடைய சமுதாயப்பணியில் ஒன்றாக இந்த திறப்பு விழா அமைந்துள்ளது, இந்த சோதனைச் சாவடி கட்டிடம் கட்டுவதற்கு கழுகுமலை மக்கள் அனைவருமே உதவி புரிந்துள்ளனர். எனவே கழுகுலை வாழ் மக்களுக்கு காவல்துறை சார்பாக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கொரோனா நோய் ஒரு மோசமான வியாதி. இந்த வியாதி குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளதால் 90 சதவீதம் பேர் முகக்கவசம் அணிய ஆரம்பித்துவிட்டார்கள். இதனுடைய தாக்கம் இன்னும் நான்கு, ஐந்து மாதங்கள் இருக்கத்தான் செய்யும். முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வதன் மூலம் இதிலிருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும், கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் எனவும், அதற்கான வழிமுறைகள் எடுத்துரைத்தார். மேலும் பொதுமக்கள், வியாபாரிகள் அனைவருமே இந்த நோய் தாக்கத்தினால் பொருளாதார நெருக்கடியில் மன உளைச்சலில் உள்ளனர், அதனால் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களிடம் காவல்துறை பொதுமக்களிடையே நல்ல இணக்கத்துடன், நல்ல உறவுடன் இருக்க வேண்டும் என்றும், காவல்துறை பொதுமக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு துறை, நாங்கள் உங்களில் ஒருவர்தான், இப்போதுள்ள இந்த நல்லுறவு இனிமேலும் தொடரவேண்டும் என்று சிறப்புரையாற்றி, சோதனைச்சாவடி வளாகத்தில் மரக்கன்று நட்டார்.


இந்த திறப்பு விழாவில் கழுகுமலை வர்த்தக சங்கத்;தலைவர் திரு. அந்தோணி மற்றும் உறுப்பினர்கள், ஆர்.எம்.ஆர் மில் உரிமையாளர் திரு. ரமேஷ், ஊர் நாட்டாமை திரு. மகேஷ்வரன், திரு. போஸ், திரு. பாஸ்கர், திரு. ராஜேந்திரன், திரு. ராதா கிருஷ்ணன், திரு. செந்தில், திரு. அருணா, திரு. மாரியப்பன், சுப்பிரமணியன், மற்றொரு மாரியப்பன், திரு. கருப்பசாமி, திரு. முப்பிடாதி, திரு. லோகு, திரு. பசுபதி, திரு. கந்தசாமி ஆகியோர் உட்பட ஊர் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி துணை கண்காணிப்பாளர் திரு. கலைக்கதிரவன், கழுகுமலை காவல் ஆய்வாளர் திருமதி. முத்துலெட்சுமி, உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்