முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வீர மரணமடைந்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வீரர் சுப்பிரமணியன் அவர்களுக்கு மாவட்ட காவல் துறை சார்பில் மலர் அஞ்சலி

.                                                                                  வீர மரணமடைந்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வீரர் தெய்வத்திரு. சுப்பிரமணியன் அவர்களுக்கு இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 


ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தூத்துக்குடி மாவட்ட காவலர் திரு. சுப்பிரமணியன் அவர்கள்  கடந்த 18.08.2020 அன்று மணக்கரை அருகே ரவுடியை கைது செய்யச் சென்றபோது நாட்டு வெடி குண்டு வீசப்பட்டதில் வீர மரணமடைந்துள்ளார். 


அவருக்கு இன்று (20.08.2020) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் மற்றும் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் அனைவரும், அவரது ஆத்மா சாந்தியடைய 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தி, அவருடைய புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 


 அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உரையாற்றிய போது காவலர் சுப்பிரமணியன் அவர்களின் இழப்பு, அவரது குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் காவல்துறைக்கும் ஒரு ஈடுகட்ட முடியாத பேரிழப்பாகும். அவருக்கு வயது 28, அவருக்கு மனைவி மற்றும் சிவஹரிஷ் என்னும் 10 மாத ஆண் குழந்தை உள்ளது, அவர் நினைத்திருந்தால் தப்பியோடிய ரவுடியை பிடிக்காமல் விட்டு உயிர் தப்பியிருக்கலாம். அவர் கடமைதான் முக்கியம் என்று கருதி, தனது உயிரையும், தனது குடும்பத்தையும் பொருட்படுத்தாமல் ரவுடியை பிடிக்கச் சென்றபோது ஏற்பட்ட தாக்குதலில் வீர மரணடைந்துள்ளார், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார் அனைவருக்கும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஆழ்ந்த இரங்கலை சமர்ப்பிக்கிறோம் என்று கூறினார். 


இந்த அஞ்சலியில் தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. செல்வன், திரு. கோபி, காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி திரு. கணேஷ், நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு திரு. இளங்கோவன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு திரு. பழனிக்குமார், தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு காவல்ஆய்வாளர் திரு. பாலமுருகன், தூத்துக்குடி ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. ஜாகீர் உசேன், மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. அன்னபூரணி, மாவட்ட குற்ற ஆவண காப்பகம் காவல் ஆய்வாளர் திரு. கஸ்தூரி  மற்றும் காவல்துறையினர், காவல்துறை அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரிகள் திரு. சுப்பையா, சங்கரன், கண்காணிப்பாளர்கள் திரு. மயில்குமார், கணேசபெருமாள், மாரியப்பன், மாரிமுத்து, நம்பிராஜன் உட்பட  உதவியாளர்கள், இளநிலை உதவியாளாகள், அலுவலக உதவியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்