முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுப்பிக்கப்பட்ட மகாகவி பாரதியார் இல்லம் : அமைச்சர் கடம்பூர் ராஜீ திறந்து வைப்பு



தூத்துக்குடி எட்டயபுரத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் பழமை மாறமல் புதுப்பிக்கப்பட்ட  மகாகவி பாரதியார் இல்லத்தை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தூத்துக்குடி எட்டயபுரத்தில் பழமை மாறமல் புதுப்பிக்கப்பட்ட  மகாகவி பாரதியார் இல்ல திறப்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (22.08.2020) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட இல்லத்தில் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இந்நிழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.போ.சின்னப்பன் அவர்கள்  முன்னிலை வகித்தார்கள்.

பின்னர் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:-

இந்திய திருநாட்டிலேயே நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட எண்ணற்ற தியாகிகள் வாழ்ந்த மண் தூத்துக்குடி மாவட்டம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்திய நாடு சுதந்திரம் அடைவதற்கு சுதந்திரத்திற்காக  குரல் கொடுத்து வாழ்ந்து மறைந்த   பாரதியார் பிறந்த  மண் எட்டயபுரம் இந்தியாவிலேயே  எட்டயபுரம் தனி சிறப்பு உண்டு  அப்படிப்ட்ட புரட்சி கவிஞர்காக வாழ்ந்த புதுமை கவிஞர்காக வாழ்ந்த பாரதியார்க்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதற்காக புரட்சித்தலைவர் எம்.ஜீ.ஆர் அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுது அவரது நூற்றாண்டு விழாவை பார் போற்றும் வகையில் மூன்று தினங்கள் புரட்சித்தலைவர் எம்.ஜீ.ஆர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு செய்தார்கள். இங்குள்ள மணிமண்டபத்தை புதுப்பித்தார்கள். மேலும் பாரதியார் பெயரில் தொழிற் நுட்ப கல்லூரியும் தொடங்கினார்கள்;. மேலும் பாரதியார்  நூற்பாலையும் தொடங்கி பெருமை சேர்த்தார்கள். அதை போலவே மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மணிமண்டப பராமரிப்பு தேவையான அத்தனை பணிகளையும் மேற்கொண்டு முழுவுருவ சிலை அமைத்து ஆண்டுத்தோறும் டிசம்பர் 11 ஆம் தேதி பிறந்த தினத்தை அரசு விழா கொண்டாடிட உத்தரவிட்டார்கள். 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் மகாகவி பாரதியார் அவர்கள் வாழ்ந்த இந்த புனித இல்லத்தை பழழை மாறமல் புதுப்பிக்க ரூ.10 லட்சம் வழங்கி உத்தரவிட்டார்கள். இன்று புதுப்பிக்கும் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு புதுப்பொழிவுடன் காணப்படுகிறது. இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதை போலவே விளாத்திக்குளம் நல்லப்ப சுவாமி அவர்களுக்கு நினைவு தூண் அமைக்கப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி மூலம் திறந்து வைத்தார்கள். மேலும் சீரப்புராணம் எழுதிய உமறுப்புலவர் அவர்களுக்கு ஆண்டுத்தோறும் அரசு விழா நடத்திட கோரிக்கை வைக்கப்பட்டு அரசு விழா கொண்டாடிட  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டு பெருமை சேர்த்தார்கள். கடலையூரில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது உரியிழந்த 34 தியாகிகளின் நினைவாக வைக்கப்பட்டுள்ள நினைவுத்தூணுக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. நினைவு சின்னத்தை ஆண்டுத்தோறும் அரசு விழாவாக கோரிக்கை வைக்கப்பட்டள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அரசு விழாவாக நடத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.    

தொடர்ந்து மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி,இ.ஆ.ப., அவர்கள், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.போ.சின்னப்பன் அவர்கள் ஆகியோh அண்மையில் உடல்நிலை குறைவால் மரணமடைந்த பாரதியார் ஆய்வாளர், எழுத்தாளர் இளசை மணியன் அவர்களின் இல்லத்திற்கு சென்று அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

முன்னதாக மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி,இ.ஆ.ப., அவர்கள், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.போ.சின்னப்பன் அவர்கள் ஆகியோர் கடலையூரில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது உரியிழந்த 34 தியாகிகளின் நினைவாக வைக்கப்பட்டுள்ள நினைவுத்தூணுக்கு  மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் திரு.மோகன், கோவில்பட்டி கோட்டாட்சி தலைவர் திருமதி.விஜயா, கோவில்பட்டி ஒன்றிய குழு தலைவர் திருமதி.கஸ்தூரி சுப்புராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.வெ.சீனிவாசன், எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் திரு.கணேசன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் திருமதி.கங்கா, எட்டயபுரம் கூட்டுறவு சங்க தலைவர் திரு.ஆழ்வார் உதயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.மணிக்கவாகம்,  உமறுப்புலவர் சங்க தலைவர் திரு.காஜா முகைதீன், பாரதியார் இல்ல காப்பாளர் திருமதி.மகாதேவி முக்கிய பிரமுகர்கள் திரு.விஜயபாண்டியன், திரு. அய்யாத்துரை பாண்டியன், திரு.அன்புராஜ், திரு. தனஞ்ஜெயம், திரு,ஞானகுருசாமி,  திரு.வண்டால கருப்பசாமி மற்றும் அலுவலர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்