தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. : மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப அவர்கள் தகவல்

தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு                              


தமிழ் வளர்ச்சித் துறையில் 2020-21ஆம் ஆண்டிற்கு அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப அவர்கள் தகவல்.

--------------------------------------------------------------------------------------------------------------

தமிழ் வளர்ச்சித் துறையில் 2020-21ஆம் ஆண்டிற்கு அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ரூ.2500- மற்றும் ரூ.500- உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உதவித்தொகை பெற விண்ணப்பிப்பவர்கள் 01.01.2020 அன்றோ அல்லது அதற்கு முன்போ 58 வயது நிறைவடைந்தவர்களாக இருக்க வேண்டும். தமிழ்ப்பணி ஆற்றிய ஆதாரங்களுடன், வயதுச்சான்று, ஆண்டு வருமானம் ரூ.72000-க்கு மிகாமல் வட்டாட்சியரிமிருந்து வருமானச் சான்று, தமிழறிஞர்கள் இருவரிடமிருந்து தகுதிநிலைச்சான்று மற்றும் இதர விவரங்களுடன் தூத்துக்குடி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். இந்த உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது தமிழ் துறையின் வலைதளத்தில் இருந்து  (www.tamilvalarchithurai.com)      பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பப் படிவம் மற்றும் இதர விவரங்களுடன் வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்திற்கு தமது விண்ணப்பப் படிவங்களை அனுப்ப வேண்டும். என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.



கருத்துகள்