108 ஆம்புலன்சில் பணியாற்ற மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள்; தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்



தூத்துக்குடி மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் பணியாற்ற மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள்; தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். என திட்ட மேலாளர் தகவல்.

------------------------------------------------------------------------------------------------------------

தூத்துக்குடி மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் பணியாற்ற மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பணியிடங்களுக்கு நடைபெறும் ஆட்கள் தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். 

தமிழகத்தில் 950க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

மருத்துவ உதவியாளர் பணிக்கு 18 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும் பி.எஸ்.சி நர்சிங் மற்றும் டி.ஜி.என்.எம்., மற்றும் பி.எஸ்.சி., எம்.எஸ்.சி., லைப் சயின்ஸ் பாடப்பிரிவுகளான தாவரவியல், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, பயோடெக், பயோகெமிஸ்டரி ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

ஓட்டுநர் பணிக்கு 24 வயதிற்கு மேலும் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 வருடம் நிறைவு பெற்றிருக்க வேண்டும் மற்றும் பேட்ஜ் உரிமம் பெற்று 1 வருடம் நிறைவு பெற்றிருக்க வேண்டும். உயரம் 162.5 செ.மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும். 

பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் தமிகழத்தின் எந்த மாவட்டத்திலும் பணி அமர்த்தப்படலாம். அதன் பின்னர் முன்னுரிமை அடிப்படையில் அவர்களது சொந்த மாவட்டத்திற்கு பணி நியமனம் செய்யப்படுவர். 12 மணி நேரம் ஷிப்ட் முறையில் பகல் இரவு என பணியமர்த்தப்படுவர்.

 தகுதியுடைய நபர்கள் தங்களுடைய கல்வி, ஓட்டுநர் உரிமம், அடையாளச் சான்று, முகவரிச்சான்று மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் தூத்துக்குடி மாவட்டம், கோரம்பள்ளம் அரசு தொழிற்கல்வி வளாகத்தில் 03.09.2020 அன்று மருத்துவ உதவியாளர் பணிக்கும் மற்றும் 03.09.2020, 04.09.2020 அன்று ஓட்டுநர் பணிக்கும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம். நேர் முகத்தேர்வுக்கு வரும் நபர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 7397724822, 7397724853, 7397724848 ஆகிய கைப்பேசி எண்களில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் திட்ட மேலாளர் ரஞ்சித் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.  


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்