முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை , மற்றும் வீரபாண்யபட்டிணம் பகுதியின் கடல் அலை அரிப்பு தடுப்பு சுவர் நீட்டிப்பு கட்டுமான பணி : மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைச்சர் துவக்கி வைத்தார்



தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் தூண்டில் வளைவு நீட்டிப்பு மற்றும்  வீரபாண்டியன்பட்டணத்தில் கடல் அலை அரிப்பு சுவர் நீட்டிப்பு ஆகிய பணிகளுக்கு பூமி பூஜையில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார்

---------------------------------------------------------------------------------------------------------

தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு நீட்டிப்பு மற்றும்  வீரபாண்டியன்பட்டணத்தில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கடல் அலை அரிப்பு சுவர் நீட்டிப்பு ஆகிய பணிகளுக்கு பூமி பூஜை நிகழ்;ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (18.11.2020) நடைபெற்றது. கட்டுமான பணிகளுக்கான பூமி நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.எஸ்.பி.சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்), திரு.சின்னப்பன் (விளாத்திக்குளம்) ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். 

நிகழ்ச்சியில்   மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் பேசியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தின் கடற்கரை பகுதி மக்கள் வைக்கின்ற கோரிக்கை அனைத்தையும் அரசு கனிவுடன் பரிசிலித்து அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒவ்வொரு திட்டமாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையிலே புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியிலே முதலமைச்சர் அவர்களும் தமிழகம் முழுவதும் திட்டங்கள் நிறைவேற்றினாலும் தூத்துக்குடி மாவட்ட மக்கள் வைத்த கோரிக்கை அனைத்தையும்  நிறைவேற்றிய அரசு மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் அரசு. 

பெரியதாழை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தூண்டில் வளைவு நீட்டித்து தர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று ரூ.30 கோடி செலவில் தூண்டில் வளைவு விரிவாக்கப்பட உள்ளது. இங்கு ஏற்கனவே அமைந்துள்ள தூண்டில் வளைவும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில்தான் அமைக்கப்பட்டது. அதை விரிவாக்கித் தர வேண்டும் என்ற வகையில் கோரிக்கை அடிப்படையில் தற்போது பணிகள் துவக்கப்பட்டது. 

தூண்டில் வளைவு விரிவாக்கம் வேண்டும் என இந்த பகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாண்புமிகு முன்னாள் அமைச்சரும் திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் கோரிக்கை வைத்தார்கள். மாவட்டத்தின் அமைச்சர் என்ற முறையில் நானும் மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சரிடம் கவனத்திற்கும், மாண்புமிகு முதலமைச்சரின் கவனத்திற்கும் எடுத்து சென்று இத்திட்டத்தினை வலியுறுத்தினோம். அதனைத்தொடர்ந்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் 110 விதியில் அறிவித்தார்கள். அதற்கான ரூ.30 கோடி நிதியையும் ஒதுக்கி அரசாணையையும் வெளியிட்டு சுற்றுச்சூழல் துறையின் தடையில்லா சான்று பெறப்பட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு இன்று முறையாக பூமி பூஜை பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் நிகழ்ச்சியாக இதில் பங்கேற்றுள்ளார். தூத்துக்குடியில் தூண்டில் வளைவு விரிவாக்க திட்டம் ரூ.30 கோடி மதிப்பீட்டில் நபாடு திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இதேபோன்று ஆலந்தலையில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு திட்டம் ஒப்பந்தப்புள்ளிகள் முடிக்கப்பட்டு துவங்கும் நிலையில் உள்ளது. அது மத்திய அரசின் சுற்றுசூழல்  தடையில்லா சான்றிதழ் பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சான்றிதழ் பெற்றவுடன் திட்டம் தொடங்கப்படும். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 11ம் தேதி தூத்துக்குடி வந்தபோது மணப்பாடு மக்களின் கோரிக்கையை ஏற்று மணல் திட்டுக்கள் நிரந்தரமாக அகற்றுவதற்கு, தூண்டில் வளைவு அமைப்பதற்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்கள்;.  இத்திட்டமும் விரைவில் செயல்படுத்தப்படும்.

வீரபாண்டியன்பட்டணம் மக்களின் கோரிக்கையை ஏற்றும் கடற்கரை பகுதியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் அலை தடுப்பு சுவர் நீட்டிப்பு  பணிகளுக்கான பூமி பூஜையில் கலந்துகொண்டு கட்டுமான பணிகளை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரை நீண்ட கடற்கரை உள்ளது. இந்த கடற்கரை பகுதியில் வாழ்கின்ற மீனவர்களுக்கு தேவையான அனைத்து வாழ்வாதார திட்டங்களும் செயல்படுத்தப்படும். பெரியதாழை கிராமத்தில் உள்ள 23 நபர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அவர்களையும் சேர்த்து 400 நபர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அம்மாவின் அரசு மீனவர்களின் நலன்காக்கும் அரசாகும். பெரியதாழை பகுதியில் குப்பைகளை அகற்ற டிராக்டர் வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் டிராக்டர் வழங்கப்படும். மேலும் இப்பகுதியில் உள்ள சாலை மேம்படுத்தப்படும். 

கொரோனா தொற்றில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. எனவே அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். முககவசம் உயிர் கவசம் ஆகும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நியாய விலைக்கடைகள் மூலம் அனைத்து குடும்பங்களுக்கும் முககவசங்கள் வழங்கினார். நாம் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்  என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் திரு.மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.சுதாகர், திருச்செந்தூர் கோட்டாட்சியர் செல்வி.தனப்ரியா, மீன்வளத்துறை இணை இயக்குநர் திருமதி.தீபா, உதவி இயக்குநர் திருமதி.வயல்லா, மீன்வளத்துறை செயற்பொறியாளர் திரு.முத்துக்குமார், உதவி செயற்பொறியாளர் திரு.ரவி, உதவி பொறியாளர் திரு.தயாநிதி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திரு.செல்வகுமார், மாவட்ட கவுன்சிலர் திரு.அஜித், பெரியதாழை அருட்தந்தை திரு.சுசீலன், பெரியதாழை ஊர் தலைவர்கள் திரு.ஜோசப், திரு.அசோக், திரு.லூர்தையா, நாட்டுப்படகு சங்க தலைவர் திரு.கயஸ், சாத்தான்குளம் ஒன்றியக்குழு தலைவர் திருமதி.ஜெயபதி, திருச்செந்தூர் ஒன்றியக்குழு தலைவர் திருமதி.செல்விவடமலைபாண்டியன், துணைத்தலைவர் திரு.ரெஜிபன்ட்பர்ணான்டோ,  வீரபாண்டியன்பட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.எல்லைமுத்து, முக்கிய பிரமுகர்கள் திரு.ராமச்சந்திரன், திரு.ஆறுமுகநயினார், திரு.மகேந்திரன், திரு.சுரேஷ்பாபு, திரு.ஜெபமாலை, திரு.வடிவேல், திரு.கொம்புத்துறைபீட்டர், திரு.மந்திரம்மூர்த்தி, திருமதி.வாசுகி, திருமதி.ராணி, திரு.திருப்பதி, திரு.கார்த்திகேயன், திரு.திருப்பாற்கடல், திரு.பொன்ராஜ், திரு.லட்சுமணபெருமாள், திரு.டேக்ராஜா, திரு.லாரன்ஸ் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.


தூத்துக்குடி பெரியதாழை , மற்றும் வீரபாண்யபட்டிணம் பகுதியின் கடல் அலை அரிப்பு தடுப்பு சுவர் நீட்டிப்பு கட்டுமான பணி : மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைச்சர் துவக்கி வைத்தார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்