பணி செய்யும் போக்குவரத்து போலீசாருக்கு மழை நீர் புகா உடைகள் தூத்துக்குடி ரோட்டரி சங்கம் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.

     



தூத்துக்குடியில் அடாது மழையிலும், விடாது பணி செய்யும்  போக்குவரத்து போலீசாருக்கு மழை நீர் புகா உடைகளை (சுயin ஊழயவ) தூத்துக்குடி ரோட்டரி சங்கம் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார். 


தூத்துக்குடியில் அடாது மழையிலும் விடாது பணி செய்யும் போக்குவரத்து காவல்துறையினரின் சேவையை பாராட்டியும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் தூத்துக்குடி ரோட்டரி கிளப் சங்கம் சார்பாக போக்குவரத்து காவல்துறையினருக்கு மழை நீர் புகா உடைகளை (சுயin ஊழயவ) வழங்கியுள்ளனர். 


மேற்படி உடைகளை இன்று (02.12.2020) காலை வி.வி.டி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள்  போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. மயிலேறும் பெருமாள், உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேஷ் உட்பட 60 போக்குவரத்து காவல்துறையினருக்கு வழங்கினார். மேலும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தி கபசுரக்குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கினார். 


இந்நிகழ்ச்சியை முத்துநகர் ரோட்டரி கிளப் (சுழவயசல ஊடரடி ழக pநயசடஉவைல) தலைவர் திரு. ஜூடு ஆரோக்கிய அன்டனி, செயலாளர் திரு.மகாலிங்கம், முத்துநகர் ரோட்டரி கிளப் (Pநயசடஉவைல ஊடரடி) உதவி ஆளுநர் திரு. பாலமுருகன், முன்னாள் தலைவர்கள் திரு. பாலாஜி, திரு.பொதிகை கண்ணன், திரு. சிவராமகிருஷ்ணன், திரு. விஜயன், உதவி தலைவர்கள் திரு. லயன்ஸ் ராஜா, உறுப்பினர்கள் செந்தில் ஆறுமுகம்,  திரு. மகராஜன், திரு. முத்துராமன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.    


இந்நிகழ்வின்போது பொதுமக்கள், காவல்துறை போக்குவரத்து ஆய்வாளர் திரு. மயிலேறும்பெருமாள் உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்