முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

48 லட்சம் மதிப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் திரவ ஆக்சிஜன் கொள்கலன் - தீவிர சிகிச்சை பிரிவு நவீன தொலை கண்காணிப்பு கருவியினை அமைச்சர் துவக்கிவைப்பு

 

.

48 லட்சம் மதிப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் திரவ ஆக்சிஜன் கொள்கலன் - தீவிர சிகிச்சை பிரிவு நவீன தொலை கண்காணிப்பு கருவியினை அமைச்சர் துவக்கிவைப்ப                                                                                             

                                                                            

 தூத்துக்குடி மாவட்ட ம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.48 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 6000 லிட்டர் திரவ ஆக்சிஜன் கொள்கலனையும், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளி கண்காணிக்கும் நவீன தொலை கண்காணிப்பு கருவியினையும் துவங்கி வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் இன்று (22.12.2020) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.48 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 6000 லிட்டர் திரவ ஆக்சிஜன் கொள்கலனையும், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளி கண்காணிக்கும் நவீன தொலை கண்காணிப்பு கருவியினையும் துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.எஸ்.பி.சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்), திரு.சின்னப்பன் (விளாத்திகுளம்) ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். 

பின்னர் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலே ஏற்கனவே 10000 லிட்டர் கொள்ளவு கொண்ட லிக்யுட் ஆக்சிஜன் கொள்கலன் உள்ளது. கொரோனா காலத்தில் மேலும் பல்வேறு புதிய படுக்கைகளுடன் கொண்ட வார்டுகள் பல துவக்கப்பட்டது. மேலும் ஆக்சிஜனின் நோயாளிகளுக்கு வழங்க தேவை அதிகரித்த காரணத்தால் கொரோனா ஆய்வுக்காக மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்தபோது நானும், மாவட்ட ஆட்சித்தலைவர், ஸ்ரீவைகுண்டம் மற்றும் விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர்களும் மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வரும் 10000 லிட்டர் உள்ள லிக்யுட் கேஸ் ஆக்சிஜன் போதவில்லை. எனவே கூடுதலாக ஆக்சிஜன் கொள்கலன் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதனடிப்படையில் நமது மருத்துவமனைக்கு 6000 லிட்டர் கொள்ளவு கொண்ட லிக்யுட் ஆக்சிஜன் நமக்கு அனுமதித்துள்ளார்கள். இந்த 6000 லிட்;டர் லிக்யுட்டாக உள்ள ஆக்சிஜன் கன்வர்ட் ஆகி கேஸ்சாக மாற்றும்போது 56 லட்சம் லிட்டர் ஆக்சிஜன் கேஸ்சாக நோயாளிகளுக்கு கிடைக்கப்பெறும் நிலை நமது மருத்துவமனையில் உருவாகியுள்ளது. 

நமது மருத்துவமனையில் மருத்துவ கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவினை நேரடியாக கண்காணிக்க கூடிய நவீன தொலை கண்காணிப்பு கருவி அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலே தூத்துக்குடி மாவட்டத்திலேதான் முதன்முறையாக மருத்துவமனை முதல்வர் அலுவலகத்திலேயே இருந்து தீவிர சிகிச்சை பிரிவிலே உள்ள நோயாளிகளின் நிலையை நேரடியாக நோயாளிகளின் ஆக்சிஜன் அளவு, இதய துடிப்பு, மூச்சு விடும் தன்மை, இ.சி.ஜி மற்றும் இருதய இயக்கத்தையும் அதன் தன்மையையும் 24 மணி நேரமும் கண்காணித்து ஏதேனும் மாற்றம் தெரிந்தால் சிறிதளவு கூட கால தாமதமின்றி உடனடியாக சிகிச்சை செய்வதற்கு மிக அவசியமானதும் அத்தகையை கருவி ஒரே நேரத்தில் 16 நோயாளிகளை கண்காணிக்கும் நமது மருத்துவமனை செயல்படும். கண்காணிக்கின்ற வசதி இன்று அமைக்கப்பட்டு உள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன். ஏன் என்று சொன்னால் கொரோனாவை மிகத்தீவிரமாக உரிய சிகிச்சை நல்ல முறையில் எடுத்ததன் பயனாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் காணொலி காட்சி மூலம் பாராட்டுகின்ற நேரத்திலே மருத்துவமனை முதல்வர் அவர்கள் காணொலி காட்சி மூலமாக தீவிர சிகிச்சை பிரிவிலே உள்ள நோயாளிகளை கவனிக்கும் வசதி வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். அதனை ஏற்று உடனடியாக அவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். இதில் சிறப்பு என்னவென்றால் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியிலே தூத்துக்குடியில்தான் முதல் முறையாக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஆண்டு தமிழர் திருநாளை கொண்டாடுவதற்காக மக்களுக்கான பொங்கல் பரிசாக ரூ.2500 ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் வழங்க மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 4,92,702 குடும்ப அட்டைதாரர்களுக்கும்  பொங்கல் பரிசான ரூ.2500 என ரூ.123 கோடி வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தினை முதன்முதலாக புரட்சித்தலைவி அம்மா அவர்கள்தான் துவக்கி வைத்தார்கள். இன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்னும் மேம்படுத்தி ஏழை, எளிய மக்கள் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடிட இத்திட்டத்தினை அறிவித்துள்ளார்கள் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் திரு.மோகன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திருமதி.சத்யா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.சுதாகர், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ரேவதி, மருத்துவ கண்காணிப்பாளர் மரு.பாவலன், துணை மருத்துவ கண்காணிப்பாளர் மரு.குமரன், மயக்கவியல் பிரிவு தலைமை மருத்துவர் மரு.பலராம், முக்கிய பிரமுகர்கள் திரு.திருப்பாற்கடல், திரு.ராமச்சந்திரன்  மற்றும் மருத்துவர்கள், அலுவலர்கள், கலந்துகொண்டனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...