முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காமநாயக்கன்பட்டியில் புனித பரwலோகமாதா விண்ணேற்பு கோப்பை 2020-2021 ஆண்டுக்கான 23வது ஆண்டு கிரிக்கெட் போட்டி : மாவட்ட காவல கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்




காமநாயக்கன்பட்டியில் புனித பரwலோகமாதா விண்ணேற்பு கோப்பை 2020-2021 ஆண்டுக்கான 23வது ஆண்டு கிரிக்கெட் போட்டி : மாவட்ட காவல கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்.   





தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டியில் புனித பரலோகமாதா விண்ணேற்பு கோப்பை 2020-2021ம் ஆண்டுக்கான 23வது ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி வீரமாமுனிவர் விiயாட்டு மைதானத்தில்  (25.12.2020)  அன்று காவல்துறை -பொதுமக்கள் நல்லுறவு போட்டி, கொரோனா விழிப்புணர்வு போட்டியாக நடைபெற்றது. இந்த கிரிக்கெட் போட்டியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் பந்தை கிரிக்கெட் மட்டையால் அடித்து துவக்கி வைத்தார். 

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசும்போது,

அமைதியான காமநாயக்கன்பட்டி ஊர் சார்பாக இளைஞர்பெருமக்கள் கொரோனா விழிப்புணர்வு போட்டியாக இந்த கிரிக்கெட் போட்டி நடத்துவது பாராட்டுக்குறியது. மேலும் இந்த கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்த வந்துள்ள நிலையில் தற்போது புதுவிதமாக கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் வந்துள்ள சூழ்நிலையில் அவற்றை எதிர்கொள்ள சிறந்த தடுப்பூசியாக கருதப்படுவது முகக்கவசம் அணிவதுதான். எனவே நாம் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் தங்களது எதிர்காலத்தை நல்ல நிலையில் முன்னேற்ற சிறந்த புத்தகங்களை படித்து தவறான பழக்க வழக்கங்குளுக்கு அடிமையாகாமல் ஒழுக்கத்தோடு நற்பண்புகளை வளர்த்து சமுதாயத்தில் சிறந்தவர்களாக திகழவேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் கூறினார். 


இந்த விழாவில் காமநாயக்கன்பட்டி பங்குதந்தை திரு. அந்தோணி அ.குருஸ், உதவி பங்குதந்தை திரு. லூர்து மரிய சுதன், வீரமாமுனிவர் கிரிக்கெட் கிளப் தலைவர் திரு. ஜான் பீட்டர் பால், விளையாட்டு வீரர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஜயப்பன், கொப்பம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு. செந்தில்வேல் முருகன், பயிற்சி உதவி ஆய்வாளர் திரு. காந்தி, கொப்பம்பட்டி காவல் நிலைய கிரிக்கெட் விளையாட்டு காவலர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.   

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...