முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காவல்துறையின் புதிய சேவை மையத்தை நாடிய 50 பேருக்கு நிவாரண தொகுப்புகள்

 


ஏழை, எளிய மக்களின் பசியை போக்குவதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேற்று ஆரம்பித்த காவல்துறையின் புதிய சேவை மையத்தை நாடிய  50 பேருக்கு அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட மளிகைப்பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.           

கொரோனா கால ஊரடங்கின்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்,  மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள்;, ஏழை எளிய மக்கள்,  உணவின்றி தவிப்பவர்கள் மற்றும் அத்தியாவசியத்தேவை வேண்டுபவர்களுக்கு வீடு தேடி வந்து உதவுவதற்கு 24 மணி நேரமும்; இயங்கும் காவல்துறையின் புதிய சேவைக்கான தனிப்பிரிவு மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. இளங்கோவன் அவர்கள் தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்பிரிவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேற்று (26.05.2021) துவக்கி வைத்து, பொதுமக்கள், தங்கள் உதவிக்கு தொடர்பு கொள்வதற்கான செல்போன் எண். 95141 44100 எண்ணையும் அறிவித்திருந்தார்.  



நேற்று அறிவித்தது முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் பல முதியவர்கள், ஏழை, எளிய மக்கள் மேற்படி எண்ணைத் தொடர்பு கொண்டு தங்களுக்குத் தேவையான உதவிகளை பெற்று வருகின்றனர். அதே போன்று இன்று தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த தனிஸ்லாஸ் மனைவி ஜெயராணி என்பவர் தன்னுடைய வீட்டருகில் 16 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வறுமையில் கஷ்டப்படுவதாகவும், அவர்களுக்கு சமைத்து சாப்பிடுவதற்கு அத்தியவசியப்பொருட்கள் இல்லை என தெரிவித்திருந்தார். அதே போன்று தனிப்பட்ட முறையில் பல்வேறு நபர்கள் தெரிவித்திருந்தனர். உடனடியாக அவர்களின் தேவைகளையறிந்து, அவர்களுக்கு உடனடியாக வேண்டிய நிவாரணப் பொருட்கள் வழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. இளங்கோவன் அவர்களுக்கு உத்தரவிட்டார். 


உத்தரவின்பேரில் அவர்களுக்கு தேவையான அரிசி, எண்ணெய், பருப்பு, வத்தல் பொடி, புளி, மசாலா பொருட்கள் உள்ளிட்ட நிவாரண தொகுப்பை காவல்துறையின் சேவை மையத்தை நாடிய 1 மணி நேரத்தில்  50 பேருக்கு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார். 


அப்போது அவர் கூறியதாவது தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த கொரோனா காலத்தில் யாரும் பசியில் கஷ்டப்பட்டார்கள் என்ற நிலை இருக்கக்கூடாது என்பதே தனது நோக்கம் என்றார். மேலும் உதவி தேவைப்படுபவர்கள் தயங்காமல் 95141 44100 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம், அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் வீடு தேடி வந்து உதவி செய்வார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவத்துள்ளார்.  


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்