முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்தவர் கைது

 .


தூத்துக்குடி மாவட்டம்   எப்போதும் வென்றான்   காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவஞானபுரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.  ஜெயக்குமார் அவர்கள் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்களுக்கு சோதனையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அதன்படி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையில் எப்போதும்வென்றான் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. முத்துமாலை, ஆய்வாளர் ரமேஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. சுப்பையா, தலைமை காவலர் திரு. கோபால் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவஞானபுரம் தெற்குத் தெருவைச் சேர்ந்த சர்க்கரை மகன் அறிவழகன் (42) என்பவரது வீட்டருகில் உள்ள ஒரு ஓட்டு சாய்ப்பில் சோதனை செய்தனர். அங்கு 15 சாக்கு மூட்டைகளில் சட்டவிரோத விற்பனைக்காக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை; அறிவழகன் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 மேற்படி போலீசார் அறிவழகனை கைது செய்து, அங்கிருந்த ரூபாய் 8,00,000 மதிப்புள்ள 400 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து எப்போதும் வென்றான் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்  ஏற்கனவே இது போன்று 2 புகையிலை பொருட்கள் சம்மந்தப்பட்ட வழக்கில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேற்படி எதிரியை கைது செய்து, பதுக்கி வைத்திருந்த அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் தலைமையிலான தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்.


இந்த ஆண்டு கடந்த 4 ½ மாதத்தில் 75 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 8 பேர் கஞ்சா போன்ற போதைப் பொருள் விற்பனை செய்ததற்காகவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த வருடம் இதுவரை 83 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 103 எதிரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 46 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.


இந்த வருடம் மட்டும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் பதுக்கி வைத்திருந்தவர்கள் என 156 வழக்குகள் போடப்பட்டுள்ளது. இதில் 4 பேர் புகையிலை வழக்கில் ஈடுபட்டவர்களும், 4 பேர் கஞ்சா வழக்கில் ஈடுபட்டவர்களும்  கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த கொரோனா கால ஊரடங்கில் கடந்த 3 நாட்களில் மட்டும் தேவையில்லாமல் சுற்றித்திரிந்தவர்களின்  1420 இரு சக்கர வாகனங்களும், 24 ஆட்டோக்களும், 5 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் தயவு செய்து இன்னும் நான்கு நாட்களுக்கு தேவையில்லாமல் வீட்டு விட்டு வெளியே வரவேண்டாம்;. கொரோனா தொற்று ஓரளவுக்கு குறைய ஆரம்பித்துள்ளது. அதனால் உங்கள் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனாவை எளிதாக கட்டுப்படுத்திவிடலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். 


இதில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ், எட்டயாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஜின்னா பீர்முகமது மற்றும் போலீசார் உடனிருந்தனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்