முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் நலிவடைந்தவர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள்

 



தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் மகளிர் திட்டத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் நலிவடைந்தவர்களுக்கு மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.

-------------------------


தூத்துக்குடி மாநகராட்சி அறிஞர் அண்ணா கூட்டரங்கம் மற்றும் கோவில்பட்டி நகராட்சி அலுவலக கூட்டரங்கில் மகளிர் திட்டத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் நலிவடைந்தவர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் இன்று (11.06.2021) நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் கலந்துகொண்டு, தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவடைந்தவர்கள் 100 நபர்களுக்கும், கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் 50 நபர்களுக்கும் என மொத்தம் 150 நபர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினார்கள். 


பின்னர் மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் பேசியதாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முன்பிருந்தே தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். பதவி ஏற்ற நாளில் இருந்து தொடர்ந்து களப்பணி ஆற்றி வருகிறார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தீவிர நடவடிக்கையால் ஆக்சிஜன் பற்றாக்குறைகள் ஏற்படாதவாறு வெளி மாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலமும், தமிழகத்தில் உற்பத்தியை அதிகரித்தும் சிறப்பான நடவடிக்கை எடுத்து தீர்த்து வைத்தார்கள். இதன்மூலம் ஆக்சிஜன் பற்றாக்குறையின்றி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தீவிர நடவடிக்கையால் தற்போது 1600, 1700 வரை இருந்த தொற்று 300க்கும் கீழாக குறைந்துள்ளது. இருப்பினும் நாம் அனைவரும் மிகுந்த கவனத்துடன் தொடர்ந்து இருக்க வேண்டும்.                         

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொரோனா தொற்றினால் பெற்றோர்கள் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சமும், ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் வைப்பு தொகையும் 18 வயது வரை படிப்பு செலவு அனைத்தையும் அரசு  ஏற்கும் எனவும், குழந்தைகளின் காப்பாளருக்கு மாதம் ரூ.3000 வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்கள். அதற்கான கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது. திருநங்கைகளுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சமூக நலத்துறை மூலம் அவர்களுக்கு ரூ.2000 கொரோனா நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா தாக்கம் நமது மாவட்டத்தில் விரைந்து குறைந்து வந்தாலும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு  கொரோனா இல்லாத நிலையை உருவாக்கிட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பேசினார்.


நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் திரு.பிச்சை, கோவில்பட்டி கோட்டாட்சியர் திரு.சங்கரநாராயணன், நகராட்சி ஆணையர் திரு.ராஜாராம், கோவில்பட்டி வட்டாட்சியர் திருமதி.அமுதா, சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் திரு.மணிகண்டன், உதவி மகளிர் திட்ட அலுவலர்கள் திரு.பாலசுந்தரம், திரு.சாமதுரை, திருமதி.மல்லிகா, முக்கிய பிரமுகர்கள் திரு.கருணாநிதி, திரு.முருகேசன் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...