குழந்தைதொழிலாளர் எதிர்ப்பு தினம் : உறுதிமொழி. ஏற்பு



தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைதொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான் தலைமையில் நடைபெற்றது

---------------

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைதொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான் தலைமையில் இன்று (11.06.2021) நடைபெற்றது. இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்தமாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர் அகற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி கூறுகிறேன என உறுதி மொழி எடுக்கப்பட்டது.

நிகழ்;ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.அமுதா, அலுவலக மேலாளர் திரு.இளங்கோ, தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் திரு.ஆதிநாராயணன், திட்ட மேலாளர் திரு.செல்வம், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் திரு.இளையராஜா, உதவி தொழிலாளர் ஆய்வாளர் திருமதி.ஹேமா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தூத்துக்குடி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்