தூத்துக்குடி மாவட்ட மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் மூலம் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் மூலம் மருத்துவ உபகரணங்களை மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்களிடம் வழங்கினார்கள்.

-----------------------

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் மூலம் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (12.06.2021) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் மருத்துவமனைக்கு தேவையான ரூ.1.99 லட்சம் மதிப்பிலான் வீல்சேர், மாஸ்க், பல்ஸ் ஆச்சிமீட்டர், சாணிடைசர், பிபி கிட், பெட்சீட் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உபகரணங்களை மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்களிடம் வழங்கினார்கள். மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் அவர்கள் மருத்துவ உபகரணங்களை பெற்று மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான் அவர்களிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.நேரு மற்றும் மருத்துவ கல்லூரி அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள்  கலந்துகொண்டனர்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்