முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அங்கிகரிக்கப்பட்ட மருத்துவமனை மருத்துவ அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சுகாதார திட்ட பணிகள் இயக்க திட்ட இயக்குநர் டாக்டர் எஸ்.உமா, இ.ஆ.ப., தலைமையில் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில்  முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அங்கிகரிக்கப்பட்ட மருத்துவமனை மருத்துவ அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் அன்று (25.06.2021) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு சுகாதார திட்ட பணிகள் இயக்க திட்ட இயக்குநர் டாக்டர் எஸ்.உமா, இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது: 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை மக்கள் கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பதற்காக அரசு மருத்துவமனை மட்டுமின்றி காப்பீட்டு திட்டத்தில் இணைக்கபட்டுள்ள தனியார் மருத்துவமனையிலும் கொரோனா சிகிச்சைக்கு காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்கள். எளிய மக்களுக்கு உதவிடும் திட்டமான காப்பீட்டு திட்டத்தின்கீழ் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகள் மட்டுமின்றி மற்ற நோயாளிகளுக்கு அதிக அளவில் சிகிச்சை அளிக்க வேண்டும். காப்பீட்டு திட்டத்திற்கு ஒவ்வொரு மருத்துவமனை 2 அலுவலர்களை நியமிக்க வேண்டும். சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் காப்பீட்டு திட்ட அட்டை உள்ளதா எனவும், காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற விருப்பம் உள்ளதா என அவசியம் கேட்க வேண்டும். காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற விருப்பம் உள்ளவர்களுக்கு காப்பீட்டு திட்ட அட்டை இல்லை எனில் நோயாளியை சிகிச்சைக்கு சேர்த்துக்கொண்டு அவரது உறவினர்கள் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் காப்பீட்டு அட்டை எண் பெற தேவையான ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டும். சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் காப்பீட்டு திட்டத்தில் டயாசிஸ் செய்யப்படுகிறது என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசு நோயாளிகள் அதிக தூரத்திற்கு சென்று சிரமப்படக்கூடாது என்பதற்காக அதிகமான எண்ணிக்கையிலான மருத்துவமனைகளை காப்பீட்டு திட்டத்தில் இணைத்துள்ளது. எனவே கடந்த ஆண்டுகளில் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிப்பதை காட்டிலும் அதிக அளவு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். காப்பீட்டு திட்டத்தின்கீழ் மருத்துமனைகளுக்கான தொகை உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை மக்கள் பயன்பெறும் இத்திட்டத்தினை அதிக அளவில் அனைத்து மருத்துவமனைகளும் செயல்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகள் குறைந்துள்ளதால் மற்ற நோயாளிகளுக்கு காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க வேண்டும். காப்பீட்டு திட்டத்;தில் அதிக அளவில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தில் இணைக்கப்பட்ட அனைத்து மருத்துவமனைகளும் காப்பீட்டு திட்ட நோயாளிகளுக்கு அதிக சிகிச்சை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.நேரு மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர்கள், தனியார் மருத்துவமனை மருத்துவ பணியாளர்கள்  கலந்துகொண்டனர். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...