தூத்துக்குடி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் மூலம் சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகள் பதிவு செய்து கொள்ளலாம் : மாவட்ட ஆட்சியர் தகவல்




தூத்துக்குடி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் மூலம் சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகள் பதிவு செய்து கொள்ளலாம் 

மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கி.செந்தில் ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்

---------------------


தூத்துக்குடி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் மூலம் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.23.04 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. மரு.கி. செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: 


தூத்துக்குடி மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 2812 எக்டேர் பரப்பளவிற்கு ரூ.23.04 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகள் 1 ஏக்கர் முதல் அதிகபட்சம் 5 ஏக்கர் வரை பயன்பெறலாம். இதர விவசாயிகள் 12.5 ஏக்கர் வரை நிலத்தில் சொட்டுநீர் பாசம் அமைத்துக்கொள்ளலாம். நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு ஆழ்துறை கிணறு அமைக்க ரூ.25 ஆயிரம், டீசல் மோட்டார் அல்லது மின் மோட்டார் அமைத்திட ரூ.15 ஆயிரம், ஆழ்துளை கிணற்றில் இருந்து நீரை எடுத்து வருவதற்கு குழாய்கள் அமைத்திட ரூ.10 ஆயிரம், தரைநிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்திட ரூ.40 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.

நுண்ணீர் பாசனத்தில் பதிவு செய்யும் விவசாயிகள் இந்த துணை நீர்; மேலாண்மை சிறப்பு திட்டத்திலும் இணைந்து கொள்ளலாம். கணிணி சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், நிலவரைபடம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 3, தாசில்தாரிடமிருந்து பெறப்பட்ட சிறு,குறு விவசாயி சான்று அட்டை, நீர்-மண் பரிசோதனை அட்டை, வங்கிகணக்கு புத்தகம் நகல் ஆகியவற்றுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் அலுவலகத்தில் கொடுத்து பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

தொடர்புக்கு:

திருச்செந்தூர், தோட்டக்கலை உதவி இயக்குநர் (9092861549),                         கயத்தார், தோட்டக்கலை உதவி இயக்குநர் (9791577112), விளாத்திகுளம், தோட்டக்கலை உதவி இயக்குநர் (9600342052), கருங்குளம்;, தோட்டக்கலை உதவி இயக்குநர் (8122197540), சாத்தான்குளம்;, தோட்டக்கலை உதவி இயக்குநர் (7639516199), தூத்துக்குடி, தோட்டக்கலை உதவி இயக்குநர் (6374275754), ஸ்ரீவைகுண்டம், தோட்டக்கலை உதவி இயக்குநர் (8807653887), ஆழ்வார்திருநகரி, தோட்டக்கலை உதவி இயக்குநர் (8807653887), புதூர், தோட்டக்கலை உதவி இயக்குநர் (9750549687), கோவில்பட்டி, தோட்டக்கலை உதவி இயக்குநர் (9750549687), ஒட்டப்பிடாரம், தோட்டக்கலை உதவி இயக்குநர், (9976531000), உடன்குடி, தோட்டக்கலை உதவி இயக்குநர், (9092861549). 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்