முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மணியாச்சி கிருஷ்னா நகர் பகுதியில் 10.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாய விலை கடை கட்டிட திறப்பு. .




தூத்துக்குடி மாவட்டம் கே.மணியாச்சி கிருஷ்ணா நகர் பகுதி நேர நியாய விலைக்கடைக்கு ரூ.10.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தினை

மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் திறந்து வைத்தார். 

-----------------

தூத்துக்குடி மாவட்டம் கே.மணியாச்சி கிருஷ்ணா நகர் பகுதி நேர நியாய விலைக்கடைக்கு ரூ.10.35  லட்சம் மதிப்பில் கdட்டப்பட்ட புதிய கட்டிட திறப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (30.06.2021) நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் கலந்துகொண்டு புதிய கட்டிடத்தினை திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார். இவ்விழாவில் கோவில்பட்டி சட்;டமன்ற உறுப்பினர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் முன்னிலை வகித்தார்.                                                                          


பின்னர் மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் தெரிவித்ததாவது:

மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்குபட்ட கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள பகுதி நேர நியாய விலைக்கடைக்கு கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாளைய தினம் 5000 நபர்களுக்கு தடுப்பூசிகள் வரப்பெற்று உடனடியாக போடப்பட உள்ளது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் சீரிய நடவடிக்கைகளால் கொரோனா படிப்படியாக குறைந்துள்ளது. நமது மாவட்டத்தில் தினசரி பாதிப்பு 48, 46 என குறைந்துள்ளது. கொரோனா பரவல் குறைந்துள்ளதால் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து மக்கள் ஓரளவிற்கு சகஜ வாழ்க்கைக்கு திரும்பி உள்ளார்கள். அரசின் திட்ட பணிகளும் ஒவ்வொரு பகுதியிலும் விரைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.                                                                                                     

இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி கோட்டாட்சியர் திரு.சங்கரநாராயணன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் திரு.ரவிசந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அபுல்காசிம், வட்டாட்சியர்கள் திருமதி.அமுதா, திரு.மணிகண்டன், கோவில்பட்டி ஒன்றியக்குழு தலைவர் திருமதி.கஸ்தூரி சுப்புராஜ், முக்கிய பிரமுகர்கள் திரு.ஜெகன்பெரியசாமி, திரு.ஆனந்தசேகரன், திரு.கருணாநிதி, திரு.முருகேசன், ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி.ரேவதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.சீனிவாசன், திரு.பாலசுப்பிரமணியன், மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் திரு.வேல்ராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்