முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த இருவர் கைது

 



தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த இருவர் கைது -  2 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் - தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.


 தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிலும் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று (05.06.2021) தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் திருமதி. ஜெயந்தி அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. சங்கர், திருமதி. சரண்யா, தலைமைக் காவலர் திரு. முத்துராஜ், முதல் நிலைக் காவலர் திரு. பாலக்குமார், காவலர்கள் திரு. சிலம்பரசன் மற்றும் திரு. ஆனந்தகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிர ரோந்துப்பணி மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மேற்படி தனிப்படையினர் தாளமுத்துநகர் கோமஸ்புரம் வடக்குப் பகுதியில் உள்ள பாலத்திற்கு அடியில் தூத்துக்குடி நயினார்புரத்தைச் சேர்ந்த கொம்மையா மகன் யமஹா முருகன் (38), தூத்துக்குடியைச் சேர்ந்த ஜேம்ஸ் மகன் ஜான்சன் பெலிக்ஸ் (25) மற்றும் இருவரோடு சேர்ந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் தனிப்படை போலீசாரைப் பார்த்ததும் ஓடினர், அவர்களில் யமஹா முருகன் மற்றும் ஜான்சன் பெலிக்ஸ் ஆகிய இருவரைப் பிடித்தனர். அப்போது அவர்கள் இரு நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தனர். மேற்படி இருவரையும் கைது செய்து அவர்கள் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் திருமதி. ஜெயந்தி அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.  


மேற்படி எதிரிகள் இருவரையும் கைது செய்து நாட்டு வெடிகுண்டை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...