முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

" நான் கொரோனா பேசுகிறேன் ''... கவிஞர் ஆ.மாரிமுத்துவின் கொரனோ விழிப்புணர்வு கவிதை


  நான்  கொரோனா  பேசுகிறேன்....



எனது
பிறப்பினை தேடித் தேடி
உனது
இறப்பினை அடையும் 
ஆறறிவு மனிதா
நான்
கொரோனா பேசுகிறேன்
கேள் !

வாழும் உடல்  தேடி
அலையும் உயிர்க் கொல்லி
நான் !

மனித உடலில்
எனை பரப்பும் மாயசக்தி
நான் !

உனை நாடாதிருக்க 
நீ  கூடாதிரு
உனை கொல்லாதிருக்க
கூடி நில்லாதிரு

உயிரைக்  கொல்வது நோக்கமல்ல
உடலெங்கும் பரவி
வாழ்வதே ஏக்கம்  !

எனை ஏற்கும் சக்தியிருந்தால்
அந்த  சக்தி  பெறும்
வழி தெரிந்தால்
நீ
வாழ்வது நிச்சயம் 
நான்
வீழ்வது சத்தியம் .....

புத்தனவன்
போதனைகள் புதைத்து  விட்டாய்
சித்தர்களின்
சிந்தனைகள்  சிதறி விட்டாய்

செத்தவர்கள் கண்டு
பதறும் நீ
இப்பொழுதாவாது
புதைத்ததை தோண்டியெடு
சிதறியதை கூட்டி அள்ளு

பாட்டி சொன்ன வைத்தியம் 
பாட்டியோடு போவதற்கல்ல
என்னோடு
போட்டி  போடுவதற்கே

உன்
உடலில்  வாழப்போவது
நீயா  இல்லை
நானா ?

வீட்டிலிரு
விலகியிரு நீ
விளைத்த தானியம் மட்டுமே 
விழுங்கியிரு

உடலால்  தனித்திரு
உள்ளத்தால் கூடியிரு

ஆதிக்குடி தமிழா
மண்ணை நேசி
உன்
மண்ணில்  விளைந்ததெல்லாம்
ருசி
புசி

உப்பும் மஞ்சளும் போதும்
எனை விரட்ட
சிறு கிராம்பு போதும்
எனைக் கிள்ளி யெறிய

காற்றில் பரவுபவனல்ல
நான் 
கைகளினால் பரவுபவன்
உனது
கண் மூக்கு  வாய்
எனது வாரவேற்பு வளைவுகள் 

புகை உனக்கு  பகை
எனக்கு  உன்னுள் புகும்
கடவுச் சீட்டு 

மது
உற்சாக பானம் 
உனக்கும் எனக்கும்
நீ மாள
நான் வாழ

கழுவு
கண் மூக்கு வாய்
தொடும் கைகளை
கழுவு
அடிக்கடி  கழுவுவதால்
அழுவதை தவிர்க்கலாம் 


கூட்டத்தை  தடுத்து
எனது
நாட்டத்தை நொறுக்கு

எனக்கும் ஆசைதான்
நீ வாழ  -  உன்னுள்
நான் வாழ

என்னுயிர் பெருக பெருக
உன்னுயிர் சிறுக சிறுக
மாண்டு  போகிறாய் மனிதா

தொட்டால் பூ மலர்ந்த
காதல் தேசத்தில் 
தொட்டதால் நான் வளர்ந்தேன்

தொட்டுவிட தொட்டுவிட
தொடர்வேன்
பட்டுவிட பட்டுவிட
படர்வேன் - பாவம்
மனிதர்கள் 

இயற்கையில் நானும் 
உன்னைப்  போல் ஒருவன் 
இயற்கையை நேசி
இயற்யோடு பேசி
இயற்கையே எனை
கொல்லும்படி யோசி
நீ

அழுவதை நிறுத்த
கழுவுவதை நிறுத்தாதே
கவனமாய் நில்லு
கொரோனா
எனைக் கொல்லு!

தூத்துக்குடி  ஆ. மாரிமுத்து.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்