முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தன்னார்வலராக பணியாற்றிய மாணவர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நேரத்தில் தன்னார்வலராக பணியாற்றிய மாணவர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

------------------------------

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நேரத்தில் தன்னார்வலராக பணியாற்றிய மாணவர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இன்று (14.07.2021)  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு தன்னார்வலராக பணியாற்றிய 36 மாணவர்களுக்கும், 12 தொண்டு நிறுவனங்களுக்கும், 30 தன்னார்வலர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:


தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த நேரத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு பணிகளை சிறப்பாக செய்துள்ளீர்கள். மாவட்ட நிர்வாகத்தில் உள்ள பல்வேறு துறை அலுவலர்களும், காவல் துறையினரும் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றினார்கள். அவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். அரசு அலுவலராக இருந்து பணியாற்றுவது வேறு, நீங்கள் அனைவரும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி தன்னார்வலராக அரசு மருத்துவமனைகளிலும், மாவட்ட கட்டுபாட்டு அறையிலும், மேலும் பல்வேறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க உதவிகளையும் செய்துள்ளீர்கள். உங்களது பணி மிகவும் பாராட்ட தக்கதாக இருந்தது. மக்களை பாதுகாக்கின்ற இந்த பணியில் உங்களை ஈடுபடுத்திக்கொண்டது மிகவும் பாராட்டக்குரியது. உங்கள் பணி சமுதாய பங்களிப்புடன் இருந்ததால்தான் நாம் கொரோனாவை விரைவாக கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. உங்களின் பங்களிப்பால்தான் கொரோனா கட்டுக்குள் வந்தது. 

நமது மாவட்டத்தில் கொரோனா குறைந்துள்ளது. கொரோனா இல்லையென நாம் இருந்துவிடக்கூடாது. கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கான விழிப்புணர்வு பணிகளை தொடர்ந்து செய்து வர வேண்டும். மாவட்ட நிர்வாகத்துடன் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், மக்களும் ஒன்றுசேர்ந்து பாதுகாப்புடன், விழிப்புடன் இருந்தால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும். அடுத்ததாக 3வது அலை வந்தாலும் நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து மக்களை காக்கின்ற பணியை மேற்கொள்வோம். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உங்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான், உதவி ஆட்சியர் பயிற்சி திரு.ஸ்ருதஞ் ஜெய் நாராயணன், இ.ஆ.ப., தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.நேரு, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.தனலட்சுமி, ஒன் ஸ்டாப் சென்டர் மைய நிர்வாகி திருமதி.செலின்ஜார்ஜ், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.இளையராஜா, பேரிடர் வட்டாட்சியர் திரு.சசிகுமார் மற்றும் அலுவலர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...