முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பயறு உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் உழவர்களின் கூட்டு நிறுவனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமலாபுரத்தில் உள்ள தூத்துக்குடி பயறு உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் உழவர்களின் கூட்டு நிறுவனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ரா ஜ் இ.ஆ.ப.இ அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

--------------------

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமலாபுரத்தில் உள்ள தூத்துக்குடி பயறு உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் உழவர்களின் கூட்டு நிறுவனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்  இ.ஆ.ப.இ அவர்கள் இன்று (14.07.2021)  நேரில் சென்று ஆய்வு செய்தார். 

விளாத்திகுளம் காமலாபுரத்தில் 1118 விவசாயிகளின் பங்களிப்புடன் தூத்துக்குடி பயறு உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் உளுந்துஇ பாசி பயறு  சிறுதானியங்கள் உட்பட பல்வேறு விதைகள் தரம் பிரிக்கப்பட்டு முதல் தர விதைகள் சான்றிதழுடன் விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் பணிகள் மற்றும் பயறு வகைகள் தோல் உரிக்கப்பட்டு மதிப்பு கூட்டு பொருளாகி விற்பனை செய்யும் பணிகள்இ செக் நல்லெண்ணெய் ,  கடலை எண்ணெய் ,  தேங்காய் எண்ணெய் ,  சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட எண்ணெய்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கம்பெனியில் உள்ள விவசாயிகளுக்கு விதை/   உரம்இ பூச்சி மருந்து உள்ளிட்ட தேவைகள் குறைந்த விலையில் தரமான அளவில் கம்பெனி மூலம் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.                                                                                                                                                

       
           

                                                      காமலாபுரத்தில் உள்ள தூத்துக்குடி பயறு உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் செயல்பாடுகள் அனைத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்  இ.ஆ.ப.இ அவர்கள் பார்வையிட்டு இதுகுறித்து அலுவலர்கள் மற்றும் விவசாய உறுப்பினர்கள் நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசனை மேற்கொண்டார்கள்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான் , துணை இயக்குநர் வேளாண் வணிகம் திருமதி.சாந்திராணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.பழனிவேலாயுதம்  நபார்டு மாவட்ட திட்ட மேலாளர் திரு.சுரேஷ்ராமலிங்கம்இ விளாத்திகுளம் வட்டாட்சியர் திரு.ரகுபதி, விளாத்திகுளம் வேளாண்மை அலுவலர் திரு.பாலமுருகன் ,  உழவர்களின் கூட்டு நிறுவன தலைவர் திரு.சந்திரன் உதவி தலைவர் திரு.ஓவலசு பெருமாள்  உறுப்பினர் திருமதி.லதா நிறுவன மேலாளர் திரு.செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள்,  விவசாயிகள் கலந்துகொண்டனர்.


.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...