முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் ஆய்வு

 

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.

----------------------------


தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் இன்று (17.07.2021) ஆய்வு மேற்கொண்டார்கள். ஆய்வின்போது சமூக நல இயக்குநர் திருமதி.டி.ரத்னா, இ.ஆ.ப., அவர்கள், சமூக பாதுகாப்புத்துறை இயக்குநர் திருமதி.எஸ்.வளர்மதி, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.               




தூத்துக்குடி ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு பாதிக்கப்பட்ட மகளிருக்கு ஆலோசனைகள் கூறும் பகுதிகளையும், தங்கும் பகுதிகளையும் பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து அடைக்கலாபுரம் செயின்ட் ஜோசப் அறக்கட்டளையில் புனித சூசையப்பர் மழலையர் இல்லத்தில் உள்ள 1 வயதுக்கும் கீழ்பட்ட குழந்தைகள் பாதுகாக்கப்படுவதை பார்வையிட்டார்.                                                                                                                                                

          தொடர்ந்துமாற்றுத்திறனுடையோர் இல்லத்தையும், மனவளர்ச்சி குன்றிய பெண்களுக்கான இல்லத்தில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதையும் பார்வையிட்டார். அங்குள்ள புனித சூசை அறநிலையத்தில் ஆதரவற்றோர் பெண் குழந்தைகள் உள்ள பகுதிக்கு சென்று அவர்களின் நலன் குறித்து விசாரித்தார். பின்னர் ஆறுமுகநேரியில் உள்ள லைட் சோசியல் முதியோர் இல்லத்திற்கு சென்று அங்கு முதியோர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அங்கு முதியோர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய கட்டப்பட்டுள்ள அறையினை திறந்து வைத்தார்.

இந்த ஆய்வின்போது, திருச்செந்தூர் கோட்டாட்சியர் திருமதி.கோகிலா, சமூக நலத்துணை துணை இயக்குநர் திருமதி.நந்திதா, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.தனலட்சுமி, முக்கிய பிரமுகர்கள் திரு.ஜெகன்பெரியசாமி, திரு.ஆனந்தசேகர், செயின்ட் ஜோசப் அறக்கட்டளை நிர்வாகி அருட்தந்தை பிரமில்டன் லோபோ, ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி திருமதி.செலின்ஜார்ஜ், திருச்செந்தூர் வட்டாட்சியர் திரு.முருகேசன், லைட் முதியோர் இல்ல தலைவர் திரு.பிரேம்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...