முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டர்னிங்பாயின்ட் அறக்கட்டளை சார்பாக. கொரோனா கால. நிவாரண தொகுப்பு. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார். -


19.07.2021

தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளியில் டர்னிங்பாயின்ட் அறக்கட்டளை சார்பாக கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு 70 ஏழை, எளிய மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை இன்று  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.  


தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளி நாராயணசுவாமி கோவிலில் கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு 70 ஏழை, எளிய மக்களுக்கு டர்னிங்பாயின்ட் அறக்கட்டளை சார்பாக அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகள் வழங்க இன்று (19.07.2021) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ஏழை, எளிய மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை வழங்கினார். 


அப்போது அவர்கள் பேசுகையில், கொரோனா பெருந்தொற்று 3ம் கட்ட பரவல் காரணமாக 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மூக்கை நன்றாக மூடி முகக்கவசம் அணிய வேண்டும், அதிலும் 2 முகக்கவசம் அணிவது மிகவும் நல்லது. அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், இவை அனைத்தையும் நாம் கடைபிடித்து நாமே நம்மை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்றும், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று விழிப்புணர்வு உரையாற்றினார்.




இதற்கான ஏற்பாடுகளை டர்னிங்பாயின்ட் அறக்கட்டளையின் மேலாளர் திரு. மொரார்ஜி தேசாய் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு. ரமேஷ்,  உதவி ஆய்வாளர்; திரு. பாண்டியன் உட்பட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...