முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் பயனடைந்த பொதுமக்கள் நன்றி பாராட்டு

 தூத்துக்குடி மாவட்டத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் முதண்மை திட்டமான உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் பயனடைந்த பொதுமக்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி

------------------------

மாண்புமிகு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழக மக்களின் நலனை காக்கும் வகையில் பல எண்ணற்ற திட்டங்களை வழங்கி உள்ளார்கள். கடந்த காலத்தில் மாண்புமிகு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது ஏழை, எளிய மக்கள் நாட்டு நடப்பை தெரிந்து கொள்ளும் வகையில் வண்ண தொலைக்காட்சி பெட்டியை வழங்கினார்கள். மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினார். மேலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார். தமிழகம் முழுவதும் போக்குவரத்தினை எளிமையாக்கும் வகையில் பல்வேறு மேம்பாலங்கள் கட்டப்பட்டது.

அதன் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் வாக்குறுதியின்படி தேர்தலுக்கு முன்பு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியின் மூலம் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. முதல்வராக பொறுப்பேற்றவுடன் இந்த மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உறுதி அளித்தார்கள். அதன்படி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் இத்திட்டத்திற்கு என தனி துறை மற்றும் சிறப்பு அதிகாரியை நியமித்து தற்போது, அந்த மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் அனைத்து பகுதிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.                                                                                                                                                                 



இத்திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 10762 மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இம்மனுக்கள் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இம்மனுக்களின் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஒவ்வொரு துறையிலும் ஒரு பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்மனுக்களின் மீதான நடவடிக்கை தொடர்பாக மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது,

                                     

                                                                        உங்கள்  பகுதியில்  முதலமைச்சர் திட்டத்தின்கீழ் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் 03.7.2021 நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் 668 நபர்களுக்கு ரூ.1கோடியே 70 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 
                                                                                                                                                                             




இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்த பூமாரி அவர்கள் தெரிவித்ததாவது:
நான் தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானந்தல் கிராமத்தில் வசித்து வருகிறேன். கடந்த 15 வருடமாக வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் பிரசாரத்திற்காக எங்கள் கிராமத்திற்கு வருகை தந்தபோது வீட்டுமனை பட்டா வேணும் என்ற கோரிக்கை வைத்து மனுவை கொடுத்தேன். தற்பொழுது மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீட்டுமனை பட்டாவினை வழங்கினார்கள். இதன் மூலம் நான் எதிர்பார்கா வகையில் எனக்கு உடன் நடவடிக்கை எடுத்து வீட்டுமனை பட்டா தந்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு  மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.                                                                                                                         
                                                                                            

இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்த பேராச்சி செல்வி அவர்கள் தெரிவித்ததாவது:
நான் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகா தரூர்பட்டியில் வசித்து வருகிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தில் மனு அளித்தேன். அய்யா ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் ஆனதும் இத்திட்டத்தின் மூலம் மனுவினை பரிசிலனை செய்து தையல் மெஷின் வழங்கினார்கள். நான் தையல் வகுப்பு படித்துள்ளேன். இதற்கு முன்னதாக புடவைக்கு கூஞ்சம் கட்டுவது, புடவை ஓரம் அடிப்பது. பிளவுஸ் தைப்பது என வேலை பார்த்து வந்தேன். இதில் போதிய வருமானம் கிடைக்கவில்லை. எனது வாழ்வாதாரத்தினை முன்னேற்றும் வகையில்  மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் தையல் மெஷின் தையல் மெஷின் வழங்கினார்கள். இதன் மூலம் எனது வாழ்வாதாரத்தினை பெருக்கும் வகையில் தையல் மெஷின் மிகவும் பயன் உள்ளதாக உள்ளது. இத்திட்டத்தின் மூலம் தையல் மெஷின் வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்களது குடும்பத்தின் மூலம் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 
 
  
                                                                                         இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்த முத்துமாரி அவர்கள் தெரிவித்ததாவது: 
தூத்துக்குடி மாவட்டம் பிஎம்சி காலணியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. கடந்த வருடம் சமூக நலத்துறையில் 2 பெண் குழந்தைகள் திட்டத்தில் கீழ் மனு அளித்தோம் தற்பொழுது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உங்கள் தொகுதியில் திட்டத்தின் கீழ் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் ரூ.50000க்கான பாண்டு பத்திரத்தை வழங்கினார்கள்.இதன் மூலம் எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு இந்த தொகை உதவியாக இருக்கும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்களது குடும்பத்தின் மூலம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 
செய்வதை சொல்வோம், செய்வதை சொல்வோம் என்று தாரக மந்திரத்தை செயல்படுத்தி வாக்குறிதியை நிறைNவுற்றி வரும் தமிழகத்திற்கு விடியல் தரும் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தூத்துக்குடி மக்கள் மனதார பாராட்டுகின்றனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்