முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மணப்பாடு மீனவர் கிராமத்தில் மணல் திட்டினை அகற்றி நாட்டு படகுகள் கடலுக்குள் வந்து செல்வதற்கு ஏதுவாக முகத்துவாரம் அமைக்கும் பணியினை : அமைச்சர் திரு.அனிதாஆர்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

 




தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் மணப்பாடு மீனவர் கிராமத்தில் மீன் வளத்துறையின் மூலம்  ரூ.15.50 லட்சம் மதிப்பிட்டில் மணல் திட்டினை அகற்றி நாட்டு படகுகள் கடலுக்குள் வந்து செல்வதற்கு ஏதுவாக முகத்துவாரம் அமைக்கும் பணியினை மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதாஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைத்தார்கள்

----------------------------------


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் மணப்பாடு மீனவர் கிராமத்தில் ரூ.15.50 லட்சம் மதிப்பிட்டில் மணல் திட்டினை அகற்றி நாட்டு படகுகள் கடலுக்குள் வந்து செல்வதற்கு ஏதுவாக முகத்துவாரம் அமைக்கும் பணியினை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (07.08.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதாஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைத்து மணப்பாடு பகுதியில் வசிக்கும்  மீனவ மக்கள் 100 சதவிதம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதனை வலியுறுத்தினார். அதனைத்தொடர்ந்து அந்த கிராமத்தில் உள்ளவர்கள்; தடுப்பூசி போட்டுக்கொள்வதை பார்வையிட்டார். மீன வளத்துறையின் மூலம் 5 நாட்டு படகு மீனவர்களுக்கு அரசு மானியத்தில் ரூ.5.73 லட்சம் மதிப்பிலான வெளி பொருத்தும் இயந்திரத்தினை வழங்கினார். மேலும் மீனவ கூட்டுறவு சங்கம் மற்றும் தமிழ்நாடு மீனவ சேர்க்கை முகாம், மங்களுர் கடல் பகுதியில் கடலில் மீன் பிடிக்கையில் காணாமல் போன திரு.இ.டென்சன்  மீனவர் அவர்களின் குடும்பத்தினருக்கு தினப்படி ரூ.250 வீதம் 2 ஆண்டுகளுக்கு உதவி தொகை வழங்கும் திட்டத்தில் ரூ.27,000க்கான காசோலைகளை வழங்கினார். 

பின்னர் மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதாஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:


          மாண்புமிகு   தமிழக முதலமைச்சரின் அவர்களின் ஆணைக்கிணங்க மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பதவியேற்ற பின்பு மீனவர்களின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக திட்டமிடப்பட்டு வருகிறது. ஆனால் தற்பொழுது  விரைவாக மீனவர்களின் குடும்பத்திற்கு தேவையான உதவித்தொகை விரைந்து வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுதும் உள்ள கடற்கரைகள் ஆய்வு செய்யப்பட்டு 3 ஆண்டுக்குள் அதற்கான திட்டங்கள் நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து பகுதிகளிலும் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் வகையில் இத்திட்டம் ஏற்படுத்தப்படும்.  இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கடலோரத்தில் கடலரிப்பு ஏற்பட்டு மண் திட்டினை அகற்றி நாட்டு படகுகள் மீன் பிடிப்பதற்கு வந்து செல்ல ஏதுவாக இன்றைய தினம் திட்டம் துவக்கி வைக்கப்படுகிறது. இதன் மூலம் கடலுக்குள் சென்ற கப்பல் கரையில் இருந்து மீனவர்கள் பார்ப்பதற்கு ஏதுவாக இத்திட்டம் நிறைவேற்றப்படும். விரைவில் தூண்டில் வளைவு அமைத்து நிரந்தர தீர்வு காணப்படும். மீனவ கிராம மக்களின் பல்வேறு கோரிக்கைகளை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடம் எடுத்துரைத்து அனைத்து கோரிக்கைகளையும் விரைந்து நிறைவேற்றப்படும். உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றும் அரசாக இருக்கும், வலைக்கூடங்களை சரிசெய்யவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு நலத்திட்டங்களை மீனவர்களுக்கு விரைந்து வழங்கப்படும் என தெரிவித்தார். 

நிகழ்ச்சியில் தி,மு.க. மாணவரணி மாநில துணை செயலாளர் திரு.உமரிசங்கர், உடன்குடி ஒன்றியக்குழு தலைவர் திரு.டி.பி.பாலசிங், மீன்வளத்துறை இணை இயக்குநர் திரு.அமல்சேவியர், மீன்வளத்துறை செயற்பொறியாளர் திரு.கங்காதரன், உதவி இயக்குநர்கள் திரு.விஜயராகவன், திருமதி.வயலா, உதவி செயற்பொறியாளர் திரு.தயாநிதி, திருச்செந்தூர் வட்டாட்சியர் திரு.முருகேசன், முக்கிய பிரமுகர்கள் திரு.ஜான்பாஸ்கர், திரு.செங்குளி ரமேஷ்,  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்