முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெண்ணின் புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றம் செய்து, அவதூறு பரப்பிய வாலிபர் கைது

 




தூத்துக்குடி மாவட்டம், எட்டயாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு பெண் பாலியல் தொழிலுக்கு அழைப்பது போல்,  அந்தப் பெண்ணின் புகைப்படத்தை முகநூலில்  பதிவேற்றம் செய்து, அவதூறு பரப்பிய வாலிபர் கைது - கைது செய்த சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.


கிருஷ்ணகிரி மாவட்டம், கங்காபிரம்பட்டி பட்டையூரைச் சேர்ந்த ராஜா மகன் மஞ்சுநாதன் (28) என்பவர், செல்போனில் ஒருவருக்கு அழைப்பு விடுக்கும்போது தவறுதலாக தூத்துக்குடி மாவட்டம், எட்டயாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு திருமணமான இளம் பெண்ணுக்கு செல்போன் அழைப்பு விடுத்து பேசியுள்ளார். இதனையடுத்து மஞ்சுநாதன், தன்னை சகோதரனாக நினைத்து பேசுமாறு கூறி, அந்த இளம் பெண்ணுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார்.  நாளடைவில் அந்த பெண்ணின் முகத்தை பார்த்து பேச வேண்டும் என்பதற்காக மஞ்சுநாதன், அந்தப் பெண் வீட்டிற்குச் சென்று கடந்த மார்ச் மாதம் ஒரு ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார். செல்போனை பெற்றுக்கொண்ட அந்தப் பெண், தனது அடையாள அட்டையை பயன்படுத்தி புதிய செல் எண் பெற்று, அதன் மூலம் மேற்படி ஆண்ட்ராய்டு செல்போனில் முகநூல் மற்றும் வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்துள்ளார். 


இந்நிலையில் சகோதரன் போல் பேசி வந்த மஞ்சுநாதன், திடீரென அந்தப் பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்து, இனிமேல் நான் உன்னிடம் பேசமாட்டேன் என்று கூறியதால், ஆத்திரமடைந்த மஞ்சுநாதன் கடந்த ஏப்ரல் மாதத்தில், தான் வாங்கிக் கொடுத்த செல்போனை அந்தப் பெண்ணிடம் திரும்பத் தருமாறு கூறியுள்ளார். உடனடியாக அந்தப் பெண்ணும், தான்  பயன்படுத்தி வந்த சிம்கார்டு மற்றும் அதிலிருந்த தகவல்களை அழிக்காமல் செல்போனை அப்படியே திருப்பிக் கொடுத்துவிட்டார். 


இதனை திரும்ப பெற்றுச் சென்ற மஞ்சுநாதன், சில நாட்களில் அந்த செல்போன் மூலம், அந்தப் பெண்ணின் முகநூலில் இருந்து, அந்தப் பெண்ணின் புகைப்படத்தை வைத்து, அந்தப் பெண்ணே ஆண்களை பாலியல் தொழிலுக்கு அழைப்பதாக மஞ்சுநாதன் பதிவேற்றம் செய்துள்ளார். அதே போன்று அந்தப் பெண்ணின் புகைப்படத்தை வைத்து பாலியியல் தொழிலுக்கு அழைப்பது போல் வாட்ஸ் ஆப்பிலும் அனுப்பியுள்ளார். இது குறித்து தகவலறிந்த பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் அளித்துள்ளார். 


மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. இளங்கோவன் அவர்களுக்கு உரிய விசாரணை மேற்கொண்டு எதிரியை கைது செய்யுமாறு உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மேற்படி எதிரி மஞ்சுநாதனை நேற்று கைது செய்து சிறையிலடைத்தனர். மேற்படி எதிரியை கைது செய்த சைபர்குற்றப்பிரிவு போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார். 


பெண்கள் அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் செல்போன் அழைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேச வேண்டாம். சமூக வலைதளங்களில் தங்களது சுய விபரங்கள், புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய வேண்டாம். இது போன்று பாதிக்கப்படும் பெண்கள் காவல்துறையிடம் தயங்காமல் புகார் அளிக்கலாம், அவர்களது பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்