முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய. காவல் துறையினருக்கு பாராட்டு

 


       


தூத்துக்குடி  மாவட்டத்தில்  கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய  3 காவல் ஆய்வாளர்; உட்பட 14 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.


தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய திருட்டு வழக்கு எதிரியை துரிதமாக செயல்பட்டு கைது செய்து, அவரிடமிருந்த திருடுபோன 3 பவுன் தங்க நகையை மீட்டு எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய முதல் நிலை வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் முருகன், உதவி ஆய்வாளர் சிவராஜா, முதல் நிலை காவலர்கள் சுப்பிரமணியன் மற்றும் ராஜா ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,


தாளமுத்துநகர் காவல் நிலைய போக்சோ சட்டம் மற்றும் சிறுமி காணாமால் போன வழக்கில், காணாமல்போன 13 வயது சிறுமியை திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை சென்று மீட்;டு, எதிரியை கைது செய்ய உதவியாக இருந்த வடபாகம் காவல் நிலைய தலைமை பெண் காவலர் சண்முகனி மற்றும் முதல் நிலை காவலர் ஆனந்தகுமார் ஆகியோரின்  மெச்சத்தகுந்த பணிக்காகவும்,


பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 02.11.2021 அன்று நடைபெற்ற கொலை வழக்கில் எதிரியை அன்றே iகுத செய்து, சிறையில் அடைத்தும், துரிதமாக செய்ல்பட்டு 26.11.2021 அன்று குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தும், மேற்படி வழக்கை 30.11.2021 அன்று நீதிமன்ற கோப்பிற்கு எடுப்பதற்கு ஆவண செய்த பசுவந்தனை காவல் நிலைய ஆய்வாளர் சித்ரகலா அவர்களின்; மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கடத்தல் வழக்கில் கடத்தப்பட்ட நபரை கயத்தாறு அருகே தீவிர வாகன தணிக்கை செய்து மீட்டு, கடத்திய எதிரிகளை கைது செய்த கயத்தாறு காவல் ஆய்வாளர் முத்து மற்றும் காவலர் கோபாலகண்ணன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,



கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய வழிப்பறி வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகள் 2 பேரை கைது செய்து, அவர்கள் பறித்து சென்ற ரூபாய் 55,000ஃ- பணம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாதவராஜா, சிறப்பு உதவி ஆய்வாளர் நாராயணசாமி, கோவில்பட்டி போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் முருகன் மற்றும் முதல் நிலை காவலர் ஸ்ரீராம் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,

சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொள்ளையடிக்க முயற்சி செய்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட கைரேகையை முன் தண்டணை பெற்ற குற்றவாளிகளின் கைரேகையுடன் ஒப்பிட்டு பார்த்து குற்றவாளியை அடையாளம் கண்டு எதிரியை கைது செய்ய உதவியாக இருந்த தூத்துக்குடி தனிவிரல் ரேகை பதிவுக்கூடம் உதவி ஆய்வாளர் கவிதா அவர்களின் மெச்சதகுந்த பணிக்காகவும், 



  3 காவல் ஆய்வாளர் உட்பட 14 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். 


இந்நிகழ்வின் போது தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உட்;பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...