முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு பாராட்டு




 தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 18 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். 


 சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய வழக்கின் எதிரிகளை போலீஸ் காவலுக்கு எடுத்து அவர்களிடமிருந்து வழக்கின் சொத்தான 45 பவுன் தங்க நகைகளை மீட்ட சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம், உதவி ஆய்வாளர் சங்கர், காவலர்கள் சதீஷ் மற்றும் திவான் பாட்ஷா ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும், 




 ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரிவாள் மற்றும் நாட்டு வெடிகுண்டு இருப்பது போன்ற வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த வழக்கின் எதிரிகள் 2 பேரை கைது செய்தும், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 70 வழக்குகளை லோக்அதாலத் நீதிமன்றத்தில் முடித்த ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ், முதல் நிலை காவலர் அனுசங்கர் மற்றும் தனிப்பிரிவு காவலர் சுப்பிரமணியன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும், 

 கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மீன் கடை உரிமையாளரை கடத்தி சென்ற வழக்கில் எதிரிகள் 5 பேரை கைது செய்து, கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்களையும் பறிமுதல் செய்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன், 

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாதவராஜா, கோவில்பட்டி கிழக்கு குற்ற பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் நாராயணசாமி, கொப்பம்பட்டி காவல் நிலைய முதல் நிலை காவலர் ஸ்ரீராம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய முதல் நிலை காவலர் பாண்டியராஜ் மற்றும் காவலர் சரவணக்குமார் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்

, நாசரேத் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகளில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த ரவுடியை மடக்கி பிடித்து கைது செய்ய உதவியாக இருந்த குரும்பூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் முத்துகுமார் மற்றும் ஏரல் காவல் நிலைய காவலர் ஜான் அந்தோணிராஜ் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும், 


 சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் சம்மந்நதப்பட்டு பிடியாணை நிலுவையில் இருந்த எதிரியை கைது செய்த சங்கரலிங்கபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் பால்ராஜ், 


விளாத்திகுளம் காவல் நிலைய முதல் நிலை காவலர் மகேந்திரன் மற்றும் காடல்குடி காவல் நிலைய முதல் நிலை காவலர் முத்துகாமாட்சி ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும், 2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 18 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.


 இந்நிகழ்வின்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உட்;பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...