முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொங்கல் பரிசுத்தொகுப்பு: கண்காணிக்க கண்காணிப்பு குழு




பொங்கல் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 04.01.2022 முதல் 1 கிலோ - பச்சரிசி, 1 கிலோ - வெல்லம், 50 கிராம் - முந்திரி, 50 கிராம் - திராட்சை, 10 கிராம் - ஏலக்காய், 500 கிராம் - பாசிபருப்பு, 100 கிராம் - நெய், 100 கிராம் - மஞ்சள்தூள், 100 கிராம் - மிளகாய் தூள், 100 கிராம் - மல்லித்தூள், 100 கிராம் - கடுகு, 100 கிராம் - சீரகம், 50 கிராம் - மிளகு, 200 கிராம் - புளி, 250 கிராம் - கடலைபருப்பு, 500 கிராம் - உளுத்தம்பருப்பு, 1கிலோ - ரவை, 1 கிலோ - கோதுமைமாவு, 500 கிராம் - உப்பு, ஒரு துணிப்பை மற்றும் ஒரு கரும்பு ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு வழங்கிட தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது. 


 அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக்கடைகள் மூலம் நடைமுறையில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 04.01.2022 பொங்;கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. மின்னணு குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் மட்டும் நியாய விலைக்கடைக்கு சென்று தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்து பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம். மேலும் பொங்கல் பரிசு வழங்கும் பணி சீராக நடைபெறுவதை கண்காணித்திட, வட்ட அளவில் துணை ஆட்சியர்கள் கண்காணிப்பு அலுவலர்களாகவும், நடமாடும் கண்காணிப்பு குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் குறித்த புகார்கள்ஃகுறைகள் ஏதுமிருப்பின் பொதுமக்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி எண். 0461-2341471-ல் புகார் அளிக்கலாம் என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தூத்துக்குடி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...