தூத்துக்குடி மாநகராட்சி மேயராக. ஜெகன் பெரியசாமி போட்டியின்றி தேர்வு

 


தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட திமுக சார்பில் அக்கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீயிடம் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். வேறு யாரும் போட்டியிடாததால் ஜெகன் பெரியசாமி போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.


இதைத்தொடர்ந்து நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


அப்போது மேயருக்கான அங்கி, ஜெகன் பெலியசாமிக்கு அணிவிக்கப்பட்டு அவருக்கு 111 பவுன் தங்கச் செயின் மற்றும் வெள்ளி செங்கோலை மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ வழங்கினார்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்