முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மகளிர் தினத்தில் மகளிருக்கான சிறப்பு தொழில் ஊக்குவிப்பு முகாம்

மகளிர் தினத்தில் மகளிருக்கான சிறப்பு தொழில் ஊக்குவிப்பு முகாம்

   


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயமாகத் தொழில் தொடங்கி வருவாய் ஈட்டவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் 25 முதல் 35 சதவிகிதம் வரை மானியத்துடன் கூடிய வங்கிக் கடன்களை தமிழக அரசு மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கி வருகிறது.


படித்த வேலைவாயப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ,  (PMEGP)  புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில நிறுவன மேம்பாட்டுத் திட்டம்   (NEEDS)  மற்றும் பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்  (PMEGP)   ஆகிய மூன்று திட்டங்களின் மூலமும் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கடன் பெற்று சுயதொழில் தொடங்கி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர்.


 இம்மூன்று திட்டங்களிலும் மகளிருக்கு 50சதவிகித ஒதுக்கீடு செய்யப்பட்டு முன்னுரிமை வழங்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்களுக்கான அழகு நிலையம், ஜவுளி வியாபாரம், தையல் தொழில், ஆயத்த ஆடைகள் தயாரித்தல், உடற்பயிற்சி நிலையங்கள், உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல், மசாலா பொருட்கள் தயாரித்தல், பேக்கரி தொழில், சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு விடுதல், சங்கு மற்றும் சிப்பிகளிலிருந்து கைவினைப் பொருட்கள் தயாரித்தல், பேன்ஸி ஸ்டோர், பலசரக்கு கடை, கம்ப்யூட்டர் சென்டர், மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பு, போன்ற தொழில்கள் தொடங்க வாய்ப்புகள் உள்ளன.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வருகிற 08.03.2022 அன்று தூத்துக்குடி, பைபாஸ் ரோடு அருகில் உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் காலை 11.00மணி முதல் மாலை 5.00 மணி வரை சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள மகளிருக்கு விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் ரூ.50000/- முதல் ரூ.5 கோடி வரையிலான தொழில் திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெறுவது குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும். குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற / பெறாத, மற்றும் 18 வயதிற்கு மேல் 45 வயதிற்குட்பட்ட / 45 வயதிற்கு மேற்பட்ட, அனைத்து மகளிரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். எனவே, இந்த அரிய வாய்ப்பினைப் பன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் பெற மாவட்ட ஆட்சித்தலைவர்மரு.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள்;; தெரிவித்துள்ளார்


 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...