முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 6(1)-ன் கீழ் தகவல் தராத அலுவலர்கள் மீது நடவடிக்கை

 


தூத்துக்குடி மாவட்டம்

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 இரண்டாம் மேல் முறையீடு வழக்குகள் தொடர்பான விசாரணை தமிழ்நாடு மாநில தகவல்  ஆணையர் முனைவர் ரா.பிரதாப்குமார் அவர்களால் நடத்தப்பட்டது.

இன்று நடைபெற்ற 61 வழக்குகளில். 4 வழக்குகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தகவல் ஆணைய மாநில தகவல் ஆணையர் முனைவர் ரா.பிரதாப்குமார்அவர்கள் தகவல்

---------------------------------

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் நீதிமன்றம் கூடத்தில் வைத்து தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 கீழான இரண்டாம் மேல்முறையீட்டு வழக்குகள் தொடர்பான விசாரணை தமிழ்நாடு மாநில பொது தகவல் ஆணையர் முனைவர் ரா.பிரதாப்குமார் அவர்களால் இன்று (04.03.2022) நடத்தப்பட்டது.

பின்னர் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர்;  முனைவர் பிரதாப்குமார் அவர்கள்; தெரிவித்ததாவது:


தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மூலம் ஆணையர்கள் மற்றும் தலைமையாணையர் உட்பட பல்வேறு அலுவலர்களால் அனைத்து மாவட்டங்களிலும்  மனுதாரர்களின் மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் 61 இரண்டாம்  மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணை நடைபெற்றது. 


மாநில தகவல் ஆணையர் அவர்களால் இரண்டாம் மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பாக விசாரணை செய்ததில்61 வழக்குகளில் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 4 பொது தகவல் அலுவலர்களுக்கு ரூ.25000/ மற்றும் ரூ.10,000/-அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 


பொது தகவல் அலுவலரை பொறுத்தவரை தகவல் அறியும் உரிமைச் சட்டம் 6(1)-ன் கீழ் தகவல் தராத அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தொடர்பான வழக்குகளுக்கு சரியான முறையில் மனுதாரர்களுக்கு பதில் தராமல் மிக மந்தமான வகையில், செயல்பட்டு உள்ளது தெரிய வருகிறது. எனவே, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அலுவலகத்தைச் சார்ந்தவர்களுக்கு அபராதம் வழங்கும் சூழ்நிலை உள்ளது. எனவே, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


இதன் மூலம் தவறுதல் தடுக்கப்பட வாய்ப்புள்ளது. இன்று நடைபெற்ற வழக்குகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் வசதிக்கேற்ப நேரடியாக சென்று தகவல்களை வேண்டும் மனுதாரர்களை அழைத்து விசாரணை நடத்தி வழக்குகளை முடித்திருக்கிறோம்.

 

இதன் முக்கிய காரணம் என்னவென்றால் சில ஆவணங்கள் பக்கத்து வட்டங்களிலேயே இருக்கும். இதன் மூலம் அப்பகுதியில் உள்ள வட்டங்களில் உள்ளஆவணங்களை எடுத்து உடனுக்குடன் மனுதாரர்கள் மனுக்களை முடிப்பதற்கு ஏதுவாக உள்ளது .

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.கண்ணபிரான்;,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.சு.அமுதா. மற்றும் அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...