முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாவட்ட அளவிலான இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள்

  08.03.2022

செய்திக் குறிப்பு


 மாவட்ட அளவிலான இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள் 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு

---------------------------

      தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திட ஏதுவாக 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட ஃமாநில அளவிலான கலைப்போட்டிகள் நடத்திட அரசு ஆணையிட்டுள்ளது.  குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் தூத்துக்குடி மாவட்ட அளவிலான போட்டிகள் மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில் 12-03-2022 அன்று நடைபெறவுள்ளது.


            குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், போட்டிகள் கலை 10.00 மணிக்கும் கிராமிய நடம் மற்றும் ஓவியம் ஆகிய போட்டிகள் மதியம் 2.00 மணிக்கும் நடைபெறும் குழுவாக போட்டியில் பங்கு பெற அனுமதியில்லை.  தனிநபராக அதிக பட்சம் 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்திட அனுமதிக்கப்படுவார்கள்


 குரலிசையிலும், நாதசுரம், வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், கோட்டுவாத்தியம், மாண்டலின், கிதார், சாக்சபோன், கிளாரினெட் போன்ற கருவி இசைப்போட்டியிலும் 5 வர்ணங்கள் மற்றும் கற்பனை இசை (மனோதர்ம இசை) நிகழ்த்தும் தரத்தில் உள்ள இளைஞர்கள் பங்கு பெறலாம்.


  தாளக்குருவிகளான தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங், கொன்னக்கோல் ஆகிய பிரிவுகளை சார்ந்தவர்கள் ஐந்து தாளங்களில் வாசிக்கின்ற தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பரதநாட்டியத்தில் 3 வர்ணங்கள் மற்றும் 


பாடல்கள் நிகழ்த்தும் நிலையில் உள்ளவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.


       கிராமிய நடனத்தில் கரகாட்டம், கணியான்கூத்து, காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் (பறையாட்டம்) மலை மக்கள் நடனங்கள் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும்.  ஓவியப்போட்டியில் பங்கேற்பவர்களுக்கான ஓவிய தாள்கள் மட்டுமே வழங்கப்படும் அக்ரிலிக் வண்ணம் மற்றும் நீர்வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் நடுவர்களால் கொடுக்கப்படும் தலைப்பில் ஓவியங்கள் வரையப்பட வேண்டும் அதிக பட்சம் 3 மணி நேரம் வரைய அனுமதிக்கப்படுவார்கள்.


    மாவட்ட போட்டிகளில் முதலிடம் பெறும் இளைஞர்கள் மாநில போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும், விவரம் வேண்டுவோர் கலை பண்பாட்டுத்துறையின் இணையதளம் றறற.யசவயனெஉரடவரசந.வn.பழஎ.in வாயிலாக விவரங்களை பெறலாம் அல்லது கலை பண்பாட்டுத்துறையின் திருநெல்வேலி மண்டல அலுவலகத்தின் தொலைபேசி எண்ணை 0462-2901890 தொடர்பு கொண்டு விவரங்கள் பெறலாம்.  இவ்வாய்ப்பினை கலைத்திறன் மிக்க தூத்துக்குடி மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


கலைப்போட்டிகள் நடைபெறும் இடம்:


     மாவட்ட அரசு இசைப்பள்ளி,

   டி.சவேரியார்புரம், சிலுவைபட்டி

 தாளமுத்துநகர் காவல் நிலையம் அருகில்

  தூத்துக்குடி -2 

 அலைபேசி எண். 

94877 39296 - 97898 43829 








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்