தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்; அவர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் விருது





மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்று வரும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மாநாட்டில், போதைப் பொருளுக்கு எதிரான  சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டமைக்காக தூத்துக்குடி மாவட்ட காவல்துறையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட  காவல் கண்காணிப்பாளர்; அவர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் விருது வழங்கி சிறப்பித்தார்.


சென்னையில் இன்று (10.03.2022) மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.


இதில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதன்படி இந்த மாநாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 21.12.2021 அன்று 21 கிலோ ஹெராயின் உட்பட போதைப் பொருள்களை பறிமுதல் செய்து கட்டுபடுத்தி போதைப் பொருளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டமைக்காக தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் விருது வழங்கி சிறப்பித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்