முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் புதிய பேருந்து நிலைய சாந்தி பேக்கரியின் மக்ரோன் ஸ்டால் திறப்பு : பொதுமக்கள் மகிழ்ச்சி வரவேற்பு

 


இந்திய ரயில் நிலையங்களில் பூகோள ரீதியான சிறப்பு வாய்ந்த பொருள்களை பிரபலப்படுத்தும் திட்டத்தின்கீழ் ஒன் ஸ்டேஷன் ஒன் புராடைக்ட் என்ற அடிப்படையில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் சாந்தி பேக்கரியின் சிறப்புமிக்க தூத்துக்குடி மக்ரூன் சந்தைப்படுத்தும் நிகழ்ச்சி 16-07-2022 சனிகிழமை   மாலையில் அன்று   தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்டது




இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் நிலைய வர்த்தக முதன்மை ஆய்வாளர் திரு சி. நடராஜன் அவர்கள் ,      தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய சாந்தி பேக்கரியின் சிறப்புமிக்க தூத்துக்குடி மக்ரூன்  ஸ்டால்லை தொடங்கி வைத்தார்கள்


இவ் நிகழ்ச்சியில் தூத்துக்குடி இரயில் நிலைய அதிகாரி நாதலால் மீனா -  துணை வணிக மேலாளர் செண்பகராஜ்  மற்றும் தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய. சாந்தி பேக்கரியின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்

இந்த மக்ரூன் ஸ்டால் 16-07-2022 முதல்  30-07-2022  வரையில மட்டும் இயங்கும்.  இது 15 நாட்களுக்கு ஒரு முறை  சங்கிலி தொடர் போல்  தொடரும் என  வர்த்தக முதன்மை ஆய்வாளர் திரு.C. நடராஜன் தெரிவித்தார்

தூத்துக்குடி மக்ரூன் என்றால் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களுக்கும் செல்கிறது. குறிப்பாக தூத்துக்குடியில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் செல்லும் ரயில் பயணிகள் வெளியூர் செல்லும் பொழுது தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மக்ருன் வாங்கி செல்வது வழக்கம் பயணிகள் வெளியூர் செல்லும் பொழுது அவசர அவசரமாக ரயில் நிலையம் வந்தாலும் கூட தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மக்ரூன் ஸ்டால் ரயில் நிலையத்திலே இருப்பதால் பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் இரண்டு நாட்களாக ரயில் நிலையத்தில் உள்ள சாந்தி பேக்கரி ஸ்டாலில் மக்ரூன் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்  ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட இந்த மக்ரோன் ஸ்டால் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...