ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

    





தூதுக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில் இன்று ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமயில் நடைபெற்றது.  


தூத்துக்குடி மாவட்ட ஊர்காவல் படைக்கு 35 ஆண்கள் 6 பெண்கள் என 41 பேர் ஊர்க்காவல் படை வீரர்களாக (ர்ழஅந புரயசனள) தேர்வு செய்யப்பட உள்ளனர் எனவும், விண்ணப்பதாரர்கள் இன்று (21.12.2022) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில் உரிய சான்றிதழ்களுடன் ஆஜராகுமாறு கடந்த 14.12.2022 அன்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. 


அதன்படி இன்று (21.12.2022) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 52 பெண் விண்ணப்பதாரர்கள் உட்பட 389 பேர் ஆஜராகியிருந்தனர். ஆஜரான விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் உயரம், கல்வித்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைைமயில் நடைபெற்றது. 


இத்தேர்வு தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு. ஜெயராஜ், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. சுடலைமுத்து, உதவி ஆய்வாளர்கள் திரு. கணேச மணிகண்டன், திரு. ஈஸ்வரமூர்த்தி, திரு. நடராஜன், ஊர்க்காவல்படை வட்டார தளவாய் திரு. பாலமுருகன், துணை வட்டார தளவாய் திருமதி. கௌசல்யா, ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழுவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்